We Women campaign

ஜனவரி
 
- WMC ஆனது  ஜனவரி மாதத்து “நாங்கள் பெண்கள்” கூட்டமைப்பின் ஒரு பாகமாக இருந்தது. நாங்கள் பெண்கள் என்பது 2008 ஆம் ஆண்டளவில் இலங்கை சுதந்திரத்தின் 60 ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடிய நிகழ்வில் ஒன்றாகக் கூடிய தனிப்பட்ட பெண்கள் மற்றும் பெண்கள் குழுக்களின் ஒரு கூட்டிணைவாகும். இக் கூட்டிணைவை உருவாக்குவதன் நோக்கம் என்னவெனில் இலங்கையிலே சிவில் யுத்தம் பொருளாதார தாராண்மை மயப்படுத்தலும் உலகமயமாக்கலும் பெண்களுக்கான கணிசமான சமத்துவத்தை ஈட்டிக்கொள்வதில் எழுந்துவரும் சவால்கள், எதிர்காலத்திற்கான உபாயங்களை மீளச் சிந்திக்க வேண்டிய நிலை பெண்கள் குழுக்களிடையே ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு சில கூட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய நிலை என்ற சூழமைவில் இலங்கையில் பெண்கள் இயக்கத்தின் சாதிப்புக்களை கூட்டாகவும், கடுமையாகவும் பிரதிபலிப்பதே இக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் இலக்காகும். இலங்கையின் 60 வது சுதந்திர தினவிழாவின்பொழுது இக் கூட்டமைப்பால் இனங்காணப்பட்ட சில முக்கிய கவனத்திற்குரிய விடயங்களானவை: யுத்தமும் இராணுவமயப்படுத்தலும்; பெண்களின் பங்குபற்றுகையும் அரசியலில் பிரதிநிதித்துவமும்; திறனற்ற தொழிலின் பெண்ணிலைப்படுத்துகை; பெண்கள் சுகாதாரம்; வறுமை பெண்ணிலைப்படுத்தப்படல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை என்பனவாகும்.  
 
ஐந்து வானொலி குறு விளம்பரங்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் கருத்துருவம் பெற்று சுதந்திர தினத்திலன்று (பெப்ரவரி 4) ஒலிபரப்பப்பட்டன. வானொலி குறு விளம்பரங்களானவை அந்த நாள் அன்று TNL வலைப்பின்னலில் 35 தடவைகள் ஒலிபரப்பப்பட்டன. மேலே சொல்லப்பட்ட முக்கிய கவனத்திற்குரிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரகடனம் தயாரிக்கப்பட்டு சிங்கள (லங்காதீப) ஆங்கில (டெயிலிமிரர்) மற்றும் தமிழ் (வீரகேசரி) செய்திப்பத்திரிகைகளில் அன்றை தினம் பிரசுரிக்கப்பட்டன.