Winners: WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடத்திய குறுந்திரைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்திற்கான போட்டியில் மிக அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப்போட்டிக்காகத் தமது திரைக்கதைப் பிரதிகளை அனுப்பிவைத்த அனைவரையும் நாம் பாராட்டும் அதேவேளை, 2014ஆம் ஆண்டுக்கான போட்டியின் வெற்றியாளர்களை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள ‘பெண்களின் போராட்டங்கள், பெண்களின் பெருமை’ எனும் தொனிப்பொருளின் கீழ் WMC நடத்தும் கண்காட்சியின் அங்குரார்பண நிகழ்வில் வழங்கப்படும். இக்கண்காட்சியை 2015 பெப்ரவரி 11 முதல் 13ஆம் திகதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

குறுந்திரைப்படத்திற்கான தொனிப்பொருள்: பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் / தீர்மானம் மேற்கொள்ளும் வகிபாகங்களில் பெண்கள்

குறுந்திரைப்பட வெற்றியாளர்கள்:

முதலாம் இடம்: ஜே.பி.கே. ஜயவீர
குறுந்திரைப்படத்தின் பெயர்: “வீகவத் கஹனிய ”

இரண்டாம் இடம்: லஹிறு சமீர
குறுந்திரைப்படத்தின் பெயர்: “விமன்ஸ் பொலிடிகல் பார்டிசிபேஷன்”

மூன்றாம் இடம்: ஹர்ஷனி சந்தரேகா மற்றும் சுகந்தி காஞ்சனா பெரேரா
குறுந்திரைப்படத்தின் பெயர்: “அவன்க ”

மூன்றாம் இடம்: கல்யாணி வீதகம
குறுந்திரைப்படத்தின் பெயர்: “பபருன்ட தெபரு”

திரைக்கதைப்பிரதி வெற்றியாளர்கள்:
முதலாம் இடம்: எம். ஜயசேன ஆராச்சி
திரைக்கதைப்பிரதியின் பெயர்: “அசுறு சனின்”

இரண்டாம் இடம்: என். சுபாகரன்
திரைக்கதைப்பிரதியின் பெயர்:

மூன்றாம் இடம்: ஜே.பி.கே. ஜயவீர
திரைக்கதைப்பிரதியின் பெயர்: “வீகவத் கஹனிய ”

சிறப்புத் திறமைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட 10 திரைக்கதைப் பிரதிகள்:

• தினூஷா சமன்மாலி – நெத்மானய
• ஆசிரி உபேக்ஸா ஜயசிங்க – தூவிலி ஆதரின்
• அருநிகா நிர்மானி பெரேரா – லக்பிம தியனியோ
• திசுன் சந்திரசிறி – காந்தி
• செதாசி வன்னிநாயக்க – எயா
• எச். என். விஜேசிங்ஹ – வீர மாதா
• மாத்தளை பி. வடிவேலன் – குளவிகள்
• வனிதா சேனாதிராஜா – நிமிர்வு
• யசிந்தா பாலச்சந்திரன் – உச்சி மீது வானிடிந்து
• புர்கான் பீ இப்திகார் – விழிப்பு