WMC Film Festival 2007

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் முகமாக ஒரு பெண்ணிய திரைப்பட விழாவானது ரஷ்ய காலாச்சார நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அங்கே தீபா மேதாவால் நெறிப்படுத்தப்பட்ட ஏத் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கலண்டர் கேள்(Calendar Girls) மற்றும் மாக்கறெதவொண்ரொற்ற (Margarethe Vontrotta) ஆல் நெறிப்படுத்தப்பட்ட ரோசன்ரா (Rosentrasse) போன்ற படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு படமும் திரையிடப்பட்ட பின்பு படம் குறித்த கலந்துரையாடலானது பேராசிரியர் நெலுபர் டி மெல் (Neloufer de Mel )மற்றும் பட விமர்சகர் பியல் காரியவாசம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கலந்துரையாடப்பட்டது. பார்வையாளர்கள் இக்கலந்துரையாடலில் ஆர்வத்துடன் பங்குபற்றியதுடன் ஆகக் குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையாவது இவ்வாறு அதிக படங்களை திரையிட்டு, அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடாத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.