WMC Film Festival 2009

திரைப்படவிழாவானது மார்ச் 23 – 26ஆம் திகதி வரைக்கும் ரஷ்ய கலாச்சார நிலையத்தில் தினமும் பி. ப . 3.00 க்கும் பி.ப. 6.00 மணிக்கும் ஆரம்பமாகியது. பின்வரும் படங்கள் திரையிடப்பட்டன. Sarah Gavro இன் Brick Lane, Marjane Satrapi யின் Persepolis மற்றும் Incent Paronnaud மற்றும் Gina Prince-Bythewood இன் Secret Life of Bees என்பன காட்சிப்படுத்தப்பட்டன. இவ்விழாவானது எல்லாப் பொதுமக்களுக்கும் திறந்துவிடப்பட்டது. அத்துடன்சமூக நீதிக்கானதும் பெண்களுடந்தொடர்புபட்டதுமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து., ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்த பார்வையாளர்களுக்கும், அத்துடன் பெண் செயற்பாட்டாளர்களுக்கும் சமூக நீதிக்காக தேசிய மற்றும் உள்ளுர் மட்டங்களில் செயற்படுபவர்களுக்கும் காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக WMC இதைக் கொண்டது. இதனூடாக WMC நிறுவனங்களுடன் பரந்த வலைப்பின்னலை ஏற்படுத்தியுள்ளது என நம்புகிறது.  பெண்களின் உரிமைப் பிரச்சினைகள் மீதான வேறுபட்ட பார்வை நோக்குகளைக் காட்டும் படங்களை பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்குவதாக உணரப்பட்டதுடன் பலருக்கு இது பயனுள்ளதாக இருந்திருக்கும் எனவும் உணரப்பட்டது.