WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் குறுந்திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்ற குறுந்திரைப்படங்களுக்கான விருதுகள் அவ்வமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப விழாவில் வழங்கப்பட்டன.

“வேகவத் கெஹனிய” (வேகமான பெண்) என்ற குறுந்திரைப்படத்தைத் தயாரித்த ஜே.பி. குசும் ஜயவீர இவ்வாண்டுக்கான முதல் பரிசைத் தட்டிச்சென்றார். இவர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒரு தாதியாக கடமையாற்றுகின்றார் என்பதோடு இதுவே குறுந்திரைப்படத் தயாரிப்புக்கான அவரது கன்னி முயற்சியாக அமைந்தது.

கொழும்பு கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகத்தின் (University of Visual and Performing Arts) நான்காம் வருட மாணவரான லஹிறு சமீர தயாரித்த “பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம்” (Women’s Political Participation) எனும் குறுந்திரைப்படத்துக்கு இரண்டாமிடத்துக்கான விருது வழங்கப்பட்டது.

ஹர்ஷனி சந்தரேகா மற்றும் சுகந்தி கே. பெரேரா ஆகிய இரு பல்கலைக்கழக மாணவியர் தயாரித்த “அவன்க” எனும் குறுந்திரைப்படத்துக்கும், அவிசாவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையும் நான்கு பிள்ளைகளின் தாயுமாகிய கல்யாணி வீதகம தயாரித்த “பபருன்ட தெபரு” எனும் குறுந்திரைப்படத்துக்கும் மூன்றாமிடத்துக்கான விருது கூட்டாக வழங்கப்பட்டது.

வெற்றிபெற்ற குறுந்திரைப்படங்கள் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் பார்வையாளர்களுக்காகத் திரையிடப்பட்டன.

Related links