ஜனவரி 2022
பங்கேற்பை அதிகரிப்பதிலும்இ தேர்தல் சீரமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை பிரியோகிப்பதிலும் தொடர்ந்து பணியாற்றும் ஒரு நிறுவனம் என்ற வகையில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புஇ உள்ளூராட்சி தேர்தல்களை ஒரு வருடத்திற்கு பிற்போடுவதற்கு வெளியிடப்பட்டுள்ள (2022.01.10ஆம் திகதி 2262-08ஆம் இலக்க) வர்த்தமானியை கேள்விக்குட்படுத்திடுவது எமது கடமையென நம்புகின்றோம்.
உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுவது பொதுமக்கள் தங்களுடைய வாக்குரிமையை பிரயோகிப்பதற்கான இறைமை மீதான ஒரு மீறுகையென்றதால்இ அத்தீர்மானம் குறித்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு கவலை மற்றும் அக்கறையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மிக முக்கியமாகஇ மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்படாமல் இருப்பதனால் எழுந்துள்ள நிலைமை குழப்பகரமானதாக உள்ளதாகவே நாம் நோக்க வேண்டும். பல உள்ளூராட்சி மன்றங்கள் உரிய முறையில் தொழிற்படுவதற்கு இயலாத நிலைமையில் உள்ளன. பல உள்ளூராட்சி மன்றங்களில் வரவுசெலவுதிட்டங்கள் நிறைவேற்றிக்கொள்ளாத முறையில்லுள்ளனஇ மாகாணக் கூட்டத்தலைவர்கள் விலகியுள்ளார்இ கூட்டத்தலைவர்கள் பதிவியகற்றப்பட்டுள்ளனர்இ மற்றும் பெண் உறுப்பினர்கள் கேவலமான முறையில் நடாத்தப்பட்டுள்ளார். இவ்வாறான சூழலிலே இத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
நியாயமான காரணங்களுக்குக்காக தேர்தலை ஒரு வருடத்திற்கு பிற்போடுவதற்கு அவ்வமைச்சருக்கு அதிகாரம் தந்துள்ள போதிலும் இத்தீர்மானத்திற்கு அரசாங்கம் எந்த வகையான காரணங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே நாம்இ இவ்வரசாங்கம் மக்களின் ஆணைக்கு அஞ்சுகின்றதென்றே ஊகிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தேர்தலை பிற்போடப்பட்டுள்ளது மக்களின் தீர்மானங்களின் இறைமையின் மேலான ஓர் அப்பட்டமான ஒடுக்குமுறையாகும்.
எனவே நாம் அரசாங்கத்தை இவ்வர்த்தமானியை இரத்து செய்துஇ குறித்த காலப்பகுதியில் உள்ளூராட்சி தேர்தலை நடாத்த வேண்டுமென கோருகின்றோம்.