உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் பெண்கள் உரிமை அமைப்புகளின் அறிக்கை.

உள்ளூராட்சி நிறுவனங்கள் குறைவடையவுள்ளதைக் கருத்திற்கொள்ளாது, உள்ளூராட்சியில் காணப்படும் பெண்களுக்கான 25மூ இட ஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாக்குமாறு பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன.

2022 ஒக்டோபர் 10

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு,

பிரதிகள்:
கௌரவ பிரதமர் தினேஷ; குணவர்த்தன

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர

உள்ளூராட்சியில் பெண்களுக்கான 25மூ இட ஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாத்தல்

பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த ஐந்து பெண்கள் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாம், இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அளவுசார்ந்தும் தரம்சார்ந்தும் (ஙரயவெவையவiஎநடல யனெ ஙரயடவையவiஎநடல) அதிகரித்துக்கொள்வதற்காகத் தொடர்ச்சியாகப் பணியாற்றியுள்ளோம். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்வதற்காக நாம் 20 வருடங்களுக்கும் மேலாக அதுதொடர்பில் ஆதரித்துவாதிட்டு வந்துள்ளோம் என்பதுடன், 2017 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் தொழிற்பாட்டுக்கு வந்த, உள்ளூர் அதிகாரசபைகளில் பெண்களுக்கான கட்டாய 25மூ இட ஒதுக்கீட்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தோம்.

இந்த இட ஒதுக்கீட்டு முறைமைக்கூடாக சுமார் 2000 பெண்கள் அரசியல் பதவிகளுக்குள் பிரவேசித்தனர் என்பதுடன் அவர்களுள் அதிகளவானோர் உள்ளூராட்சியில் உன்னதமான பணிகளை முன்னெடுத்துள்ளனர். அவை கணிசமான அடைவுகள் மூலமும் ஆய்வு மூலமும் சரிபார்க்கப்பட்டுள்ளன. (ஆய்வுக் கற்கை , காணொளி , திரைப்படம)

2022 ஒக்டோபர் 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உள்ளூராட்சி அதிகாரசபைகளின் (பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள்) உறுப்பினர்களினது எண்ணிக்கையை சுமார் 8000 இலிருந்து 4000 வரை குறைக்க வேண்டுமெனக் கோரியிருந்த அண்மைக்கால ஊடக அறிக்கையொன்றை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். பெண் உறுப்பினர்களைக் குறைப்பதால் நேர்மறையானதும் எதிர்மறையானதுமான தாக்கங்கள் இருப்பதுடன் இந்த படிமுறையானது பெண்களின் இட ஒதுக்கீட்டைச் செயற்படுத்துவதில் நேரடி எதிர்விளைவை ஏற்படுத்துமென நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.

நாம் அறிந்தவகையில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் தேவையானது இன்றைய காலத்தைவிட முன்னெப்போதும் பொருத்தமானதாக இருந்ததில்லை. இலங்கை இன்றளவும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த நாடொன்றாக இருந்துவருகின்றது. அத்துடன் குறிப்பிடப்பட்ட இட ஒதுக்கீடானது உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கானதாக இருந்ததே தவிர அவை மாகாண சபைகளுக்கோ பாராளுமன்றத்துக்கோ உரித்தானதாக அமையவில்லை. 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பெண்களுக்கென 25மூ இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 2011ஆம் ஆண்டில் எண்ணிக்கையில் 100 உறுப்பினர்களாக இருந்த பெண்கள் பிரதிநிதித்துவம் 2018 ஆம் ஆண்டு தேர்தலில் 2000 உறுப்பினர்கள் வரை அதிகரித்தது.

இந்த நேர்மறை அடைவானது, சட்டவாக்கங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் கொள்கைசார் இடையீடுகள் ஆகிய இரு வழிமுறைகளுக்கூடாகவும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம். உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்திலும் அதற்கு இயைபான ஏனைய சட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் எவையேனும் மாற்றங்கள் பெண்களுக்காகவுள்ள இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கின்றதும் அதிகரிக்கச் செய்கின்றதுமான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயத்தை நாம் மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம். அப்போதுதான் கஷ;டப்பட்டு பெறப்பட்ட இந்த வெற்றியானது குறைக்கப்படவோ, இழக்கப்படவோ மாட்டாது.

எனவே, அரசியலிலுள்ள பெண்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி, உள்ளகப்படுத்தல், ஜனநாயக மற்றும் ஒழுக்கவியல்சார் அரசியல் கலாசாரத்துக்காகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற பெண்கள் அமைப்புக்கள் என்ற வகையில், முன்மொழியப்பட்டவாறு உள்ளூராட்சி அதிகாரசபை உறுப்பினர்களைக் குறைப்பதாக இருந்தால், அச்சபைகளில் பெண்களுக்காகவுள்ள 25மூ இட ஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாத்து அதிகரித்துத் தருமாறு ஜனாதிபதி, பிரதமர் அத்துடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

நன்றி.

உண்மையுள்ள

குமுதினி சாமுவேல், நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு, கொழும்பு

சந்திரா வெதகெதர, தவிசாளர், பெண்கள் அபிவிருத்தி நிலையம், பதுளை

எச். இந்துமதி, நிகழ்ச்சித்திட்டத் தலைவர், விழுது

பீ. லோகேஷ;வரி, நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர், பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி, கண்டி

சிறியானி பத்திரகே, கிராமிய பெண்கள் முன்னணி, காலி

இங்கே பதிவிறக்கவும்

Share the Post:

Related Posts