ஊடக அறிக்கை
தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியற் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கான கடிதம்
பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவதனை இசைவற்றதாக்க வேண்டாம்
மகளிர் குழுக்கள் மற்றும் மகளிர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகக் கீழே கையெழுத்திட்டுள்ள சிவிற் சமூக நிறுவனங்களாகிய நாம், 2017ஆம் ஆண்டு 16ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்திற்கு அமையப் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் கோருகின்றோம்.
மாசி 10ஆம் திகதி உள்ளூர்அதிகார சபைகள் தேர்தலினைத் தொடர்ந்து குறிப்பிட்ட அரசியற் கட்சிகள் ஏற்கனவே, தெளிவாக உருவாக்கப்பட்ட சட்டமான பெண்களின் ஒதுக்கீட்டினை முழுமைப்படுத்தும் “நியாயமற்ற” சுமையை ஏற்க வேண்டியதில்லை என உணர்வதாக ஊடக அறிக்கை மற்றும் ஏனைய மூலங்களின் ஊடாகவும் நாம் புரிந்து கொண்டுள்ளோம். தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையுடன் சட்டத்தினை திருத்துவதற்கு அரசியற் கட்சிகள் கவனம் செலுத்துவதாக நாம் புரிந்து கொண்டுள்ளோம். இது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். பெண்களுக்கு எதிரான வரலாறுசார் பாரபட்சத்திற்கு நிவாரணமளிக்கும் குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியாக இச்சட்டத்தை நாம் வரவேற்றோம். 25 வீத ஒதுக்கீடு என்ற உணர்வினை மதிக்குமாறும், பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மட்டத்தினை குறைப்பதனை தவிர்க்குமாறும் அரசியற் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் நாம் உறுதியாக முறையிடுகின்றோம்.
பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீடு தொடர்பில் சில விதிவிலக்குகள் உண்டு என நாம் அறிவோம். சட்டத்திற்கு அமைய, அரசியற் கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை “தொங்கு நிலைக்கு” காரணமாகித், தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின், அதில் பெண் உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கவில்லையெனின், ஒதுக்கீட்டை நிறைவேற்றும் பொறுப்பும் அரசியற் கட்சிக்கு இல்லை. அதேபோன்று, அரசியற் கட்சி ஒன்று அல்லது சுயாதீனக் குழுவொன்று உள்ளாட்சி சபையில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பின், மூன்று உறுப்பினர்களை விட குறைவானவர்களுக்குத் தகுதி பெற்றிருப்பின், பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் இருந்து அவர்களும் விலக்குப் பெறுவர்.
இது நியாயமற்றதாகத் தோன்றினாலும், ஆகக் குறைந்தது 10 வீதமான சபைகளில் மாத்திரம் போட்டியிடுவதற்ககு மாத்திரம் பெண்களுக்கு ஏதுவாகும் சூழ்நிலையிலேயே அது கலந்துரையாடப்பட்டது. அதுவும் சமமான பங்கீடு அல்ல. பாராளுமன்றத்தில் அனைத்து அரசியற் கட்சிகளாலும் விவாதிக்கப்பட்ட, கலந்துரையாடப்பட்ட மற்றும் இணங்கப்பட்ட விடயமாகும். அதன் பின்னரே சட்டமாக உள்வாங்கப்பட்டது. இவ்விரண்டு விதிவிலக்குகள் மாத்திரமே சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஆறாம் இலக்க உள்ளூர்அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 25இல் குறிப்பிட்டவாறு, ஏதேனும் ஒரு அரசியற் கட்சி அல்லது சுயாதீன குழுவில் இருந்து அனைத்து சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25 வீத ஒதுக்கீட்டை விட குறைவாக இருப்பின், உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைபாடு “முதலாவது வேட்புமனுப் பத்திரம் அல்லது மேலதிக வேட்பு மனுப் பத்திரத்தில் உள்ள பெண் வேட்பாளர்களின் மத்தியில் திருப்பி வழங்கப்படல் வேண்டும்…”
புதிய திருத்தங்களின் கீழ் நீதியானதும், நியாயமானதுமான தேர்தலைத் தொடர்ந்து, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அல்லது கட்சிச் செயலாளர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் தற்போது ஒதுக்கீட்டினைக் குறைப்பது, அப்பட்டமான நியாயமற்ற, சட்டவிரோதமான மற்றும் ஜனநாயகமற்ற செயல் மாத்திரமல்ல, பெண்களை வெறுக்கும் வகையிலான செயற்பாடுமாகும்.
சுமார் 20 வருடங்களாக மகளிர் நிறுவனங்கள் மற்றும் மகளிர் உரிமைச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட நீண்ட மற்றும் கடும் போராட்டத்தின் பெறுபேறாக பெண்களிற்கான 25 வீத ஒதுக்கீடு உள்ளது. உள்ளூர்அதிகார சபைகளில் மிகமோசமான பெண்களின் குறைந்தளவு பிரதிநிதித்துவத்தை அடையாளங் காண்பதற்கு அது முயற்சித்தது. இந்த ஒதுக்கீட்டிற்கு முன்னர் உள்ளூர்அதிகார சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2 வீதத்தை விட அதிகரித்ததில்லை. அரசியல் நிறுவனங்களில் பெண்களுக்கான உறுதியான செயற்பாட்டின் முழுமையான கருத்தானது, பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அது நாடுகின்றது. அதன் மூலம், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் இருக்கைகளின் ஜனநாயகப் பகிரலை ஏதுவாக்கி, பல வருடங்களாகச் செல்வாக்குச் செலுத்திய ஆண்களிடமிருந்து அது அபராதத்தை உருவாக்கலாம். பிரதிநிதித்துவத்தின் ஆகக்கூடிய சலுகையை அனுபவிக்க முடியாது என்பதனையும் ஆண்களை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துகின்றது. ஒதுக்கீட்டில் மறைந்துள்ள அடிப்படை கோட்பாடாக இது உள்ளது.
சட்டத்தினால் செயற்படுத்த வேண்டிய ஒதுக்கீட்டினை புரட்டுவது தேர்தல் ஆணைக் குழுவிற்கானதல்ல. சட்டமானது (புதிய பிரிவு 27 ஊ (1)), ஒவ்வொரு உள்ளூர்அதிகாரசபைகளிலும் 25 வீதம் பெண்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் என குறிப்பிடுகின்றது. பாரிய கட்சிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் பெரும் பங்கினை பகிர்வது நியாயமற்றது என சொல்வதும், உண்மையில் பெண்களுக்கு எதிரான பாரபட்சமாகும். ஆணோ அல்லது பெண்ணோ, தேர்தல்களில் அனைத்து வேட்பாளர்களும் சமமாகவே உள்ளனர். சமமான வேட்பாளர்களாக போட்டியிட்ட பின்னர் யார் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது ஒரு விடயமல்ல. அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களை குறைத்து மதிப்பிடுவது மற்றும் ஆண்களுக்கு சமமாக நடத்தாமை போன்று தெரிவது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனையடைந்துள்ளோம். “மேலதிக நபர்கள்” பட்டியலில் இருந்து சில கட்சிகள் பெண்கள் தெரிவு செய்யப்படலாம் என்பது “அநியாயமானது அல்ல”. ஆண்களுக்குப் பதிலாக அதிக பெண்கள் தெரிவு செய்யப்படல் அல்லது நியமிக்கப்படல் கூடாது என கட்சிகள் கருதுவதே அநியாயமானது.
தெரிவு செய்யப்பட்ட தலைவர்களாகப் பதிவயை எடுப்பதற்கு, குறிப்பாகப் போட்டியிடுவதற்கு மற்றும் ஆசனத்தை வெல்வதற்கு பெண்களின் ஆற்றலை சமூக மற்றும் கலாசார தடைகளை நியாயமற்றதாக தடுக்கும், பெண்களுக்கு சந்தர்ப்பங்களை அதிகரிப்பதற்று அரசியல் நிறுவனங்களில் பெண்களின் ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய உறுதியான நடவடிக்கைச் செயற்பாடுகளுக்கான நோக்கமாகும். ஒதுக்கீட்டை எதிர்கொள்வது, ஆண் தலைவர்கள் ஆசனங்களை கைவிடுவதற்கு வழிகோலுகின்றது என அரசியற் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களிடையே தவறான எண்ணக்கரு உள்ளது. உண்மையில், கடந்த தேர்தல்களை விட உள்ளூர்அதிகாரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த காலத்தை விட பெருமளவில் அதிகரித்துள்ளது. வேறு விதமாகக் கூறுவதாயின், 25 வீத ஒதுக்கீட்டினை அனுமதிப்பதற்கு மற்றும் இந்த ஆசனங்களுக்கு பெண்களே உரித்தானவர்கள். அதிகாரத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களின் பல்வகைத் தன்மையை பரவலாக்கல் என்பது பெண்களுக்கு மாத்திம் நல்லதல்ல. இலங்கையின் ஜனநாயகச் செயற்பாட்டிற்கும் அது முக்கியமானது.
இந்த நாட்டில் பெண்களே அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களாக உள்ளனர், அவர்களுடைய வாக்குகள் உங்களுடைய தேர்தலுக்கு முக்கியமானது. அதனால், அத்தகைய கடுமையான பெண் எதிர்ப்பு மற்றும் பாரபட்சம் என்பது சகித்துக் கொள்ளப்பட முடியாது என்பதனை அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும், விசேடமாக சட்டத்தை ஆக்குபவர்களுக்கு நாம் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
பெண்களின் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறு நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அழைக்கின்றோம். சமத்துவம் மற்றும் பாரபட்சமின்மைக்கு தமது அர்ப்பணிப்பினை மதிக்குமாறும், சட்டத்தை மேலும் திருத்தக் கூடாது எனவும், அல்லது பெண்களை மதிப்பதற்கு, முன்னிறுத்துவதற்கு, பாதுகாப்பதற்கு மற்றும் நிறைவு செய்வதற்குப் பதிலாக உரிமைகளினை மேலும் குறைப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டு வரக் கூடாது எனவும் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளிடமும் நாம் கோருகின்றோம்.
கீழே கையெழுத்திட்டவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பின்வருவனவற்றை கோருகின்றோம்.
1) சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அனைத்து அரசியற் கட்சிகளும் பின்பற்றுவதனை உறுதி செய்தல், மற்றும்
2) ஒதுக்கீட்டில் விதிவிலக்கினை அறிந்து கொள்ளல், எவ்வாறிருப்பினும், ஆகக் குறைந்த தேவைகளுக்கு அப்பால் செல்வதற்கு அரசியற் கட்சிகளை ஊக்குவித்தல் மற்றும் 25 வீத ஒதுக்கீட்டு உணர்வை பூர்த்தி செய்வதற்கு மேலதிக பெண்களை முன்மொழிதல், அதன் மூலம் பல்வகை பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல்
அக்கறை கொண்ட சிவிற் சமூக அமைப்புக்கள், மகளிர் குழுக்கள் மற்றும் மகளிர் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக.
15 மாசி 2018.