தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்பு பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய மாநாட்டினை 2022, ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் சமூக விஞ்ஞானிகள் சங்கத்துடன் இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது ஒழுங்கு செய்திருந்தது. கல்வியியலாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையின் ஆவணம் இதுவாகும்.
இன்று இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுமாறு என்னை அழைத்தமைக்காக மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கு முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எனது மனதுக்கு மிக நெருக்கமானதும், நான் மென்மேலும் கற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றதுமான ஒரு பிரச்சினையைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக இவ்விடத்தில் உங்கள் அனைவருடனும் சேர்ந்திருக்கக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த மாநாடு இதனைவிட ஒரு முக்கியமான தருணத்தில் நடாத்தப்பட முடியாது. இப்போது இலங்கை – அதன் அனுபவத்திலேயே – மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அத்துடன், சமூக மீளுருவாக்கப் பணி – பிள்ளைப் பராமரிப்பு, குடும்பங்களைப் பேணுதல் மற்றும் சமூக உறவுகளைப் பேணுதல் போன்ற விடயங்களெல்லாம் மிகவும் கடினமானவையாக மாறிவருகின்றன. அடிப்படையில் இப்பணிகள் – ஊதியத்துடனோ அல்லது ஊதியமின்றியோ – பெண்களாலேயே செய்யப்படுகின்றன என்பது மட்டுமன்றி, செய்வதற்குச் சிரமத்திலும் சிரமமான பணிகளாகவும் இவை மாறிவருகின்றன. இது வெறுமனே ஒரு பொருளாதார நெருக்கடி மாத்திரமல்ல. மாறாக, பாரியளவிலானதும், நீண்டகாலமாக உருவாக்கத்தில் இருந்துவந்ததுமான ஒரு சமூக நெருக்கடியுமாகும்.
சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டுத் திட்டங்கள். இந்தப் பதவிகளில் இருப்பதற்குத் தகுதிவாய்ந்த பெண்கள் மட்டுமே அதற்கான தகுதியை உறுதிப்படுத்த வேண்டுமென்ற பேச்சுக்களினால் இது அவ்வப்போது சீர்குலைக்கப்படுகின்றது. ஏனெனில், அதிகாரப் பதவிகளில் ‘தகுதியற்ற’ பெண்களை வைத்திருத்தல் வெட்கத்துக்குரியது இல்லையென்றால், வீடுகளிலும், வேலைத்தளங்களிலும் மற்றும் சமூகத்திலும் காணப்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக சட்டச் சீர்திருத்தங்கள் மூலமே போராட வேண்டும். பொதுவாக, சமத்துவத்தையும் நீதியையும் வழங்குமென எதிர்பார்க்கப்படும் இந்த நிறுவனங்களே, விசேடமாக சிறுபான்மை சமூகங்களையும் குறைந்த வருமானமீட்டும் குழுக்களையும் சேர்ந்த பெண்களை புறத்தொதுக்குகின்ற, ஒடுக்குகின்ற மற்றும் சுரண்டுகின்ற விதம் பற்றிய அங்கீகாரம் மிகச் சிறியளவிலேயே காணப்படுகின்றது.
ஆனாலும், பெண்களுக்கு பாதகங்களையும் சிரமங்களையும் உருவாக்கும் நிலைமைகள் குறித்து மிகச் சிறியளவிலான இடம் அல்லது விவாதம் காணப்படுவதே இங்கு மிக ஆபத்தாக உள்ளது. உதாரணமாக, உயர் பணவீக்க விகிதங்கள், பலவீனமான சமூகப் பாதுகாப்பு முறைமைகள் மற்றும் வாழ்க்கைக்கான ஊதியப் பற்றாக்குறையுட்பட சுரண்டலுடனான வேலை நிலைமைகள் என்பன சீரழிந்துவரும் பொருளாதார மற்றும் வாழ்க்கை நிலைமைகளுடன் இணைக்கப்படும் விதம்; இன-மத தேசியவாதங்களின் மீளெழுச்சி மற்றும் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள் அத்துடன் பால்நிலைமயப்படுத்தப்பட்ட படிமங்கள் (பநனெநசநன ளவநசநழவலிநள) என்பவற்றைப் பேணுவதில் அதன் தாக்கம்; பொருளாதார நிலைபேறின்மை, அரசியல் குழப்பநிலை, குறிப்பாக ஆண்களுக்கிடையே காணப்படும் ஒருவித பதகளிப்பு (யnஒநைவல) நிலை போன்ற விடயங்களுடன் குடும்ப மற்றும் தனிப்பட்ட இயங்குநிலைகள் கடினமான முறையில் இணைக்கப்படுகின்ற விதம் மற்றும் வீடுகளிலும் பொது இடங்களிலும் வன்முறைகளை அதிகரிப்பதற்கு அது பங்களிப்புச் செய்யும் விதம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சமூக மீளுருவாக்கப் பணியின் முக்கியத்துவம் மற்றும் மனித சமூகத்தின் பராமரிப்புக்கும் உயிர்வாழ்தலுக்கும் அவசியமான சில முன்-நிபந்தனைகளை அது எவ்வாறு வழங்குகின்றது என்பன பற்றிய கொள்கைசார் இடைவெளிகளிலும் சொற்பளவான அங்கீகாரமே காணப்படுகின்றது. மிக முக்கியமாக, எனது பார்வையில், ஊதியமுள்ள மற்றும் ஊதியமற்ற என இருவகைப்பட்ட சமூக மீளுருவாக்கப் பணியின் கண்ணுக்குப் புலப்படாத தன்மையும் சுரண்டலும் நாம் முகங்கொடுத்து வருகின்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் பகுதிகளாகவே உள்ளன. விடயத்தின் மையப் பகுதிக்கு நாம் சென்று பார்த்தால், இந்த நெருக்கடிகளை முகாமை செய்ய முதலாளித்துவம் எந்த முறைகளை நாடியுள்ளதோ, அந்த முறைகளைக் கண்டுகொள்ளலாம்.
இதனாலேயே இம்மாநாடும் இங்கு இடம்பெறும் கருத்தாய்வுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. நான்ஸி ப்ரேசர் (யேnஉல குசயளநச) என்பவர், ‘மூலதனம் மற்றும் பராமரிப்பு பற்றிய முரண்பாடுகள்’ (ஊழவெசயனiஉவழைளெ ழக ஊயிவையட யனெ ஊயசந) எனும் கட்டுரையில் குறிப்பிடுவதைப்போல், ஊதியமுள்ளதாயினும் சரி அல்லது ஊதியமற்றதாயினும் சரி, பராமரிப்புப் பணி மற்றும் சமூக மீளுருவாக்கப் பணி என்பவற்றில் காணப்படும் சிரமங்கள் தற்செயலானவை அல்ல. மாறாக, அவை புதிய தாராளவாத முதலாளித்துவத்தினதும் புதிய தாராளவாத சமூகத்தினதும் கட்டமைப்புக்களில் ஆழமாக வேரூன்றியுள்ளவை ஆகும். அவர் இதனை முதலாளித்துவத்தில் காணப்படும் சமூக மீளுருவாக்க முரண்பாடு என விவரிக்கின்றார். அதாவது, சமூக மீளுருவாக்கமானது நிலையான மூலதனக் குவிப்புக்கு அவசியமாக உள்ளபோதிலும், முதலாளித்துவமானது சமூக மீளுருவாக்கச் செயன்முறைகளைச் சீர்குலைக்கின்றது.
“ஊதியம் செலுத்தப்படாத சமூக மீளுருவாக்கச் செயற்பாடானது, ஊதியம் செலுத்தப்படும் பணியினதும், மிகைப் பெறுமானத்தின் திரட்சியினதும் (யஉஉரஅரடயவழைn ழக ளரசிடரள) மற்றும் முதலாளித்துவத்தின் தொழிற்பாட்டினதும் இருப்புக்கு அவசியமானதாகும்” என குறிப்புணர்த்திக் கூறுகின்றேன். வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு, பாடசாலைக் கல்வி மற்றும் பயனுள்ள பராமரிப்பு என்பன இல்லாத நிலையிலும், அதேபோன்று புதிய தலைமுறைத் தொழிலாளர்களை உருவாக்குதல், ஏலவே இருக்கின்றவர்களை முழுமைப்படுத்துதல், சமூகப் பிணைப்புக்களையும் பகிரப்பட்ட புரிதல்களையும் மேற்கொள்ளல் என்பவற்றுக்கு உதவுகின்ற வேறு செயற்பாடுகள் இல்லாத நிலையிலும், இவ்விடயங்கள் எவையும் காணப்பட முடியாது. ஒரு முதலாளித்துவ சமூகத்தில் பொருளாதார உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளுக்கு சமூக மீளுருவாக்கம் என்ற விடயம் ஓர் இன்றியமையாத பின்னணி நிபந்தனையாகும்.
எனவே, மனிதப் பாடங்களின் (hரஅயn ளரடிதநஉவள) உருவாக்கம், ஆதாரம் மற்றும் பராமரிப்பு என்பன முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கு அவசியமானவை ஆகும். பிள்ளைப் பேறாக இருக்கட்டும், குழந்தைப் பராமரிப்பாக இருக்கட்டும், இளைஞர்களை சமூகமயப்படுத்தல், குடும்பங்களைப் பராமரித்தல், முதியவர்களைக் கவனித்தல், சமூகப் பிணைப்புக்களைப் பேணுதல், சமூக விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் மீளுருவாக்குதல் என்பவையாக இருக்கட்டும் – இவை அனைத்தும் மற்றும் இவற்றுக்கு மேலதிகமானவையும் மனிதப் பாடங்களின் உருவாக்கத்துக்கும் ஆதாரத்துக்கும் அவசியமான பணிகளாக உள்ளன. முதலாளித்துவப் பொருளாதாரங்களில், இப்பணியானது பணரீதியிலான பெறுமானங்களைப் பெறாது இலவசமானதாகக் கருதப்படுகிறது. அத்துடன் இது பராமரிப்புப் பணி என்று விபரிக்கப்பட்டு, அடிப்படையில் அது பெண்களுக்குரிய பணி என்றும் கொள்ளப்படுகின்றது. பராமரிப்புப் பணி பற்றிய இக்கருத்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கான பெண்களின் உள்ளார்ந்த தூண்டுணர்வின் ஓர் இயல்பான நீட்சியாக பால்நிலைசார் நிலையூன்றிய படிமங்கள் (புநனெநசநன ளவநசநழவலிநள) ஊக்குவிக்கின்றன. தமது கணவன்மார்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அதேவேளை, (சேலையும் உயர்குதி பாதணியும் அணிந்துகொண்டு) திறமையான முறையில் பராமரிப்புப் பணியுடன் சேர்த்து ஒரு தொழிலையும் நிருவகிப்பதற்கு இயலுமாகவுள்ள பெண்களைப் பற்றிய கருத்துக்களே, பெருமளவில், வெற்றிகரமான பெண்களைப் பற்றிய கருத்துக்களாகக் கொள்ளப்படுகின்றன. இது தொழில் வாழ்க்கைச் சமநிலை என்று அழைக்கப்படுவதுடன், இவை அனைத்தையும் நீங்கள் எவ்வாறு செய்ய முடியும் என்பதை உங்களுக்குக் கூறுகின்ற பயிற்சிப்பட்டறைகள் உள்ளன என்பது பற்றியும் நான் புரிந்து வைத்துள்ளேன். இவை அனைத்திலும் பெண்கள் எவ்வாறு பேசப்படுகின்றனர் என்பதற்கான மிகவும் வலுவான ஒரு வர்க்கக் கூறு உள்ளது என்பதுடன், இவை எவையுமே அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், கமத்தொழிலாளர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள் அல்லது நுண்கடன் திட்டங்களில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையைக் கணக்கில் எடுக்கவில்லை. இப்பணிக்குத் துணைபுரிகின்ற பாடசாலைகள், சுகாதார முறைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பொறிமுறைகள் போன்ற பொது நிறுவனங்களும் முறைமைகளும் குறைக்கப்பட்டு பலவீனப்படுத்தப்படுகின்ற அதேவேளை, பராமரிப்புப் பணியானது, வீடுகள், சுற்றுப்புறங்கள், முறைசாரா வலையமைப்புக்கள் போன்ற ஒரு ‘தனிப்பட்ட செயற்தளத்துக்கு’ (pசiஎயவந ளிhநசந) ஒதுக்கப்படுகின்றது. பராமரிப்புப் பணிக்கான கூட்டு அல்லது சமூகப் பொறுப்புடைமை என்ற எண்ணக்கருவுக்குப் பதிலாக, விடயங்கள் சரிப்பட்டு வராதபோது, பிரத்தியேகமானதும் தனிப்பட்டதுமான பொறுப்புடைமை மற்றும் தனிப்பட்ட தோல்வி என்பன பற்றிய எண்ணக்கருவொன்று எம்மிடம் உள்ளது. நேர முகாமைத்துவம் இல்லாமை அல்லது பல பணிகளை வினைத்திறனான முறையில் செய்ய முடியாமை அல்லது நிதி முகாமைத்துவம் பற்றித் தெரியாமைஃபுரிந்துகொள்ளாமை என்பன தோல்விக்கான காரணமாக அமைகின்றன. எனவேதான், அதனைக் கையாள்வதற்காக எம்மிடம் பயிற்சிப்பட்டறைகள் உள்ளன.
இந்த வேலைஃவாழ்க்கை சமநிலை பற்றிய எண்ணக்கருக்களே இத்தகைய சாத்தியமற்றதும் யதார்த்தமற்றதுமான எதிர்பார்ப்புக்களைத் தோற்றுவிக்கின்ற தவிர்க்கமுடியாத நெருக்கடிக்கான பதிலளிப்புக்களைக் குழப்பியடிக்கின்றன. பராமரிப்புப் பணியை சமமாகப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் மிகவும் நயவஞ்சகமான முறையில் அப்பணியை வறுமைக்குட்பட்ட பெண்கள்மீதும் இலகுவில் பாதிப்புறத்தக்க பெண்கள்மீதும் இறக்கிவைத்தல் – அடிப்படையில் சமூக மீளுருவாக்க உழைப்பை ஒரு கீழ்நிலை மட்டத்துக்கு தள்ளிவிடுவதை அடையாளம் காண்பது பெண்ணிலைசார் பதிலளிப்பொன்றாக அல்லது, ஆகக் குறைந்தபட்சம், நெருக்கடிக்கான பால்நிலைசார் கூருணர்வுள்ள பதிலளிப்பொன்றாகப் பார்க்கப்படுகிறது. கொள்கை வகுப்பாளர்கள் பால்நிலை பற்றிக் கதைக்கும்போது, இத்தகைய விவரணத்துக்கூடாகவே அவர்கள் பெண்களின் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடி அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கின்றனர்.
அதேவேளை, முதலாளித்துவமானது அதன் சொந்த நோக்கங்களுக்காக, சிறந்த விடயதான வகைகளை உருவாக்குவதற்கு சமூக மீளுருவாக்கப் பணியை வடிவமைக்கும் பொருட்டு பாடசாலைகள் மற்றும் சுகாதாரக் கவனிப்புச் சேவைகள் போன்ற பொது நிறுவனங்களைப் பயன்படுத்துவதிலிருந்து பின்வாங்கவில்லை. உதாரணமாக, காலனித்துவக் காலத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்கள் ‘காலனித்துவச் செயற்றிட்டத்திற்கு சேவையாற்றக்கூடிய சாந்தமான, நாகரிகமுள்ள, பூர்வீகப் பெண்களையும் ஆண்களையும்’ உருவாக்க முயற்சித்ததைப் போன்று, புதிய தாராளவாதக் கல்வியானது, முழுமையான புதிய தாராளவாத விடயதானத்தை உருவாக்கப் பாடுபடுகின்றது. அவ்விடயதானமானது, வலுவான பிரத்தியேகப் பொறுப்புணர்வுடன் சேர்ந்த, அபிலாi~யுள்ள, போட்டித்தன்மை வாய்ந்த, தொழில்முயற்சி சார்ந்த மற்றும் ஊக்குவிக்கப்பட்ட விடயதானமாகக் காணப்படுகிறது. பெருமளவில் போட்டித்தன்மை வாய்ந்ததும் ஆபத்தானதுமான பொருளாதார மற்றும் சமூக சூழலில் தனிப்பட்ட பொறுப்புடைமை மீதான இத்தகைய வலியுறுத்துகையானது தவிர்க்க முடியாதவாறு தோல்வி மற்றும் மன அழுத்தம் பற்றிய உயர் ஆபத்தைக் கொண்டு இணைந்துள்ள படியினால், துன்ப துயரங்களுக்கான உணர்ச்சிகளையும் எதிர்வினைகளையும் மருத்துவமயப்படுத்துவதானது நாம் அனுபவிக்கும் சமூக நெருக்கடிக்கு முதலாளித்துவத்தின் பதிலாக மாத்திரம் வெளிப்பட்டிருக்கவில்லை. மாறாக அது, சுகாதாரத் துறைக்கு, குறிப்பாக மருந்தாக்கற்பொருள் தொழில்துறைக்கு, பாரியளவிலான சந்தை வாய்ப்புக்களையும் இலாபங்களையும் சௌகரியமான முறையில் திறந்துவிட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் உள ஆரோக்கியம் மற்றும் உளசமூகத் துறையில் பணியாற்றியதை நினைவுபடுத்திப் பார்க்கின்றேன். தம்மீது களங்கம் கற்பிக்கப்படும் என்ற காரணத்தினால் மக்கள் உள ஆரோக்கிய மற்றும் உளசமூகச் சேவைகளை அணுகிப் பெறத் தயங்கியமை பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் தமது பிரச்சினைகளை உளவியல் ரீதியில் வெளிப்படுத்தவில்லை. நான் அத்துறையில் தொடர்ந்து பணியாற்றவில்லை. என்றாலும், உளவியல் பற்றிய கற்கைநெறிகளில் ஏதேனும் பிரபல்யம் காணப்படின், இன்று அது மிகவும் வித்தியாசமானதாக இருக்குமென நான் சந்தேகிக்கின்றேன்.
எவ்வாறாயினும், சமூக மீளுருவாக்கம் மீதான நிலையானதும் ஒருங்கிணைந்ததுமான இந்தத் தாக்குதலானது குடும்பங்களையும், சமூகங்களையும் மற்றும் குறிப்பாகப் பெண்களையும் தகர்ந்துபோகும் நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதே உண்மையாகும். இன்று பெரும்பாலான குடும்பங்களும், சமூகங்களும், தனிநபர்களும் இந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை அடிப்படையில் பராமரிப்புப் பற்றிய நெருக்கடியொன்றாக, சமூக மீளுருவாக்கச் செயற்பாடுகளின் முறிவொன்றாகவே அனுபவித்து வருகின்றனர். பணவீக்கமானது உணவுப் பாதுகாப்பு முதல் கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படைச் சேவைகளை வழங்குவது வரை அனைத்திலும் பாரிய அழுத்தங்களை ஏற்படுத்துகின்ற படியினாலும், ஊதியத்தின் பெறுமதி சரிவடைந்து வருகின்ற படியினாலும், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவடைந்து வருகின்ற படியினாலும் – இவை அனைத்தும் குடும்பங்கள் மீதும், மக்களின் நல்வாழ்வு மீதும், மக்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும் குடும்ப மற்றும் சமூகப் பிணைப்புக்கள் மீதும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பெருமளவிலான பதகளிப்பும் அரசியல் ஸ்திரமின்மையும் நிலவுகின்ற காலப்பகுதியில், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் எவ்வாறு அதிகரித்துச் செல்கின்றன என்பதற்கு போதியளவான சான்றுகள் உள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில், பராமரிப்புப் பற்றிய நெருக்கடியும் ஒரு நெறிமுறைசார் நெருக்கடியாக (அழசயட உசளைளை) வெளிப்படுத்தப்படுகின்றது. தாய்மார்களால் தாய்மைக்குரிய பணிகளை உரியமுறையில் செய்ய முடியவில்லை; குடும்ப விழுமியங்கள் தகர்க்கப்படுகின்றன் சமயம் மற்றும் பாரம்பரிய விழுமியங்கள் முதலியவற்றிலிருந்து மக்கள் தூரமாகிச் செல்கின்றனர். அண்மையில் போ~hக்கு பற்றிய விவாதமொன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் பங்கேற்ற அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரொருவர் சில கருத்துக்களை முன்வைத்தார். நவீனகால தாய்மார்களுக்கு பாரம்பரிய உணவுகளிலுள்ள போ~hக்குப் பெறுமதி தெரியாது என்றும், அவர்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்து சத்துள்ள காய்கறிகளைப் பறித்துச் சமைப்பதற்குப் பதிலாக, கொக்காக்கோலாவுடன் சேர்த்து கொத்துரொட்டியை தாமும் உண்டு, தமது பிள்ளைகளுக்கும் வெளிப்படையாகவே உண்ணக் கொடுக்கின்றனர் என்றும், இதுவே ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான காரணமாகும் என்றும் அவர் கருத்துரைத்தார்.
தற்போது பொருளாதார நெருக்கடிக்குரிய தீர்வாக, பொது நிறுவனங்களை மேலும் குறைத்தல் மற்றும் வரிகளை அதிகரித்தல் என்பவையே முன்மொழியப்பட்டு வருகின்றன. இது, பராமரிப்புப் பற்றிய நெருக்கடிக்கு என்ன செய்யப்படலாம் என்பது குறித்து முற்றுமுழுதாகக் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்பதையே காட்டுகின்றது. இதற்கு முரணாக, அரசாங்கம் உண்மையிலேயே சமூகப் பாதுகாப்பை வழங்கும் எல்லாப் பொறிமுறைகளையும் மும்முரமாக நீக்கிக்கொண்டே, சமூகப் பாதுகாப்புக்கான வரியையும் விதித்துள்ளது.
இந்தக் காலகட்டம் இருள் சூழ்ந்ததாகவும் பயங்கரமானதாகவும் இருப்பதனால், எதிர்காலத்தை மாற்றியமைக்க நாம் மேற்கொள்ளும் பணிகளுக்கு சமூக மீளுருவாக்கம் மீதான போராட்டங்கள் மையமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. இனிமேலும் நாம் சமூக மீளுருவாக்கப் பணியையும், ஊதியமுள்ள மற்றும் ஊதியமற்ற பராமரிப்புப் பணியையும் புறக்கணித்துப் பின்னுக்குத் தள்ள முடியாது. சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் பிரித்தாளும் நவ-தாராளவாத முதலாளித்துவக் கட்டமைப்புக்கள் என்பவற்றுடன் பிரிக்க முடியாதவாறு இணைக்கப்பட்டுள்ள இப்பணி வேண்டுமென்றே அழிக்கப்படுவதையோ அல்லது தனிப்பட்ட செயற்தளத்திற்குள் முடக்கப்படுவதையோ நாம் புறக்கணிக்க முடியாது என்பதுடன் அதனைப் புறக்கணிக்கவும் கூடாது. ஊதியமுள்ள மற்றும் ஊதியமற்ற பராமரிப்புப் பணியினது இந்த கையகப்படுத்தலின் வகுப்பு, பால்நிலை மற்றும் இனத்துவக் கூறுகளை நாம் அங்கீகரித்தாக வேண்டும்.
சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளை உருவாக்குகின்றதும் அவற்றைப் பராமரிக்கின்றதுமான கட்டமைப்புக்களை புதியதொரு மாற்றத்துக்குக் கொண்டுவருவதை சவால்களுக்குட்படுத்தாத சமத்துவமானதும் வலுப்படுத்துவதும் போலியான வாக்குறுதிகளிலும் நிலைகொண்டு இலகுவாக சுரண்டல்களையும் ஒடுக்குமுறைகளையும் முகாமை செய்ய மாத்திரம் எமது நடவடிக்கைகளை வரையரைக்குட்படுத்தாத வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்தளவு பயன்மிகுந்த விடயமாக இருப்பினும், பராமரிப்புப் பணி தொடர்பாக மதிப்பீடு செய்யும்போது அதனை பகல்நேர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளல் மற்றும் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் தரவுகளில் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளின்கீழ் உள்ளடக்குதல் என்பவற்றுடன் வரையறை செய்ய முடியாது. சமத்துவமின்மை மற்றும் ஆதிக்கம் போன்றவற்றின் (பெரும்பான்மைக்கு) குறித்த கட்டமைப்புக்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுநடாத்தும் அதேநேரம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை (ஒரு சிலருக்கு) காண்பித்தல் என இரட்டை வேடத்தைக் காட்ட முயற்சிக்கும் அதிகாரத்திலுள்ளவர்களால் பெண்ணியம் அல்லது பெண்ணியச் செயற்பாடுகள் தவறாகப் பயன்படுத்தப்படாமலிருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பால்நிலை, சமத்துவம் மற்றும் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய கருத்துக்கள், அதிகாரக் கட்டமைப்புக்கள் மற்றும் சுரண்டல் கட்டமைப்புக்கள் ஊடாகத் தடுக்கமுடியுமான வகையில் மறைக்கப்பட்டுள்ள தாராளவாதக் கருத்தாடல்கள் மூலம் தடுக்கப்படுவதுடன் இந்த நிலைமைகளின் காரணமாக இக்காலப்பகுதிகளில் பெண்ணிலைவாதத்துக்கு பாரிய சவால் விடுக்கப்படுகின்றது என நான் நம்புகின்றேன். சுரண்டல்கள், அழுத்தங்கள் மற்றும் ஆதிக்கங்கள் போன்ற கட்டமைப்புக்கள் பற்றிய பெண்ணிய விமர்சனங்கள் எம்மால் பலப்படுத்தப்பட வேண்டி இருப்பதுடன் கொள்ளையடிக்கும் சுபாவத்துடன் உள்ளதும், குறிப்பாக நிதிமயப்படுத்தப்பட்ட புதிய தாராளவாத ஜனநாயக இடைவெளிகள் மூலம் சமூகப் பாதுகாப்புத் திறன்களும் வாழ்வியல் நிலைமைகளும் பலவீனப்பட்டுப்போயுள்ள விதத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நெருக்கடியின் வகுப்பையும், கட்டமைக்கப்பட்ட ஆய்வுகளைக் குறைக்க அல்லது புறக்கணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் நாம் நிராகரிக்க வேண்டும். அத்துடன் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், சட்ட மறுசீரமைப்பு, அரசியலில் பெண்களின் பங்களிப்பு போன்றவாறான அரைத்த மாவையே அரைக்கும் பழைய எண்ணக் கருத்துக்களின் பக்கம் இந்த விவாதத்தைக் கொண்டுசெல்ல எடுக்கப்படும் முயற்சிகளையும் நாம் நிராகரிக்க வேண்டும். இத்தகைய கருத்துக்கள் பெரும்பாலும்; பாலியல், ஆணாதிக்கம், இனவாதம் மற்றும் அரசியல், பொருளாதார மற்றும் சட்டக் கட்டமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் காணப்படும் அடக்குமுறையான சுபாவம் பற்றிக் கவனத்திற் கொள்வதில்லை.
அதனால் மறுசீரமைப்பு மாத்திரமல்லாது மாற்றமொன்றுக்கு வருவதற்கான சந்தர்ப்பமொன்றும் எமக்கு இத்தருணத்தில் கிடைத்துள்ளது. அதாவது சமூகத்தை பிறிதொரு கண்ணோட்டத்தில் உற்றுநோக்குவதற்கும், ஒழுங்கமைக்கும் ஆற்றலை நோக்குவதற்குமான முறையொன்றின் பக்கம் செல்வதற்கான உந்துகையொன்று இதன்மூலம் கிடைக்கின்றது. மேலும் நியாயம், சமத்துவம் மற்றும் சுதந்திரமான சமூகமொன்றை ஒழுங்கமைப்பதை அடிப்படையாகக் கொண்ட ஓர் உலகம், செல்வத்தையும் எல்லா இயற்கை வளங்களையும் பகிர்ந்துகொள்ள முடியுமானதும் மனித வர்க்கத்தைப் பேணிப் பராமரிப்பதற்கு விரும்புகின்ற, எனினும் சுரண்டலுக்கு உகந்ததல்லாத சூழலொன்றைக் கொண்டதும், பாதுகாப்பு, அன்பு மற்றும் வளர்ச்சி போன்றவற்றை வாழ்வின் முழுமையான நிபந்தனைகளாகக் கொண்டதுமான உலகமொன்றை நோக்கிப் பயணிப்பதற்கான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. நிச்சயமற்ற தன்மைக்குள் காலத்தைச் செலவிட்டு ஒரே நாணயத்தின் இரு பக்கங்களையும் ஆராய்ந்துகொண்டு, அடக்குமுறையாளர்களையும் சுரண்டப்படுபவர்களையும் ஒன்றுசேருமாறான வீண் கோரிக்கைகளை விடுத்து, பிரச்சினைகளை உருவாக்கியவர்களே அவற்றுக்கான தீர்வின் பகுதியாகவும் இருப்பரென எதிர்பார்த்து காலத்தை வீணடிக்க இனிமேலும் எம்மால் முடியாது. இது அவற்றுக்கெல்லாம் பொருத்தமான நேரமும் அல்ல. அதனால் பெண்ணிலைவாதத்தால் வழங்கப்படும் எல்லா சக்திகளையும் ஆற்றல்களையும் மாற்றப்பட்ட திறன்களையும் வாரியணைத்துக்கொள்ள வேண்டிய காலமே எமக்கு இப்போது உருவாகியுள்ளது. அதாவது புதியதோர் உலகைப் பற்றிச் சிந்தித்து, அதனை உருவாக்கும் வாய்ப்பே இதுவாகும்.
நன்றி. •