சமூக விஞ்ஞானிகள் சங்கத்துடன் (SSA) இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (WMC) நடத்திய தெற்காசியாவில் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை மற்றும் பெண்களின் உழைப்பை அங்கீகரிப்பதில் ஒப்புரவு மற்றும் சமத்துவம் குறித்த பிராந்திய மாநாடு 2022, ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கொழும்பில் நிறைவடைந்தது. இலங்கையில் நடைபெறும் ஊதியமற்ற பராமரிப்பு வேலை (UCW) தொடர்பான முதலாவது மாநாடு இதுவாகும்.
இந்த மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து இந்த பிரச்சினையில் பணியாற்றுபவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். பங்கேற்பாளர்களில் மாவட்ட அளவிலான செயற்பாட்டாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் அடங்குவர், அவர்கள் குறிப்பாக இலங்கையில் ஊதியமற்ற பராமரிப்பு வேலைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு பங்களித்தனர்.
ஐக்கிய இராச்சியத்தின், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி தீப்தா சோப்ரா தொடக்க உரையை வழங்கினார். கலாநிதி சோப்ரா ஊதியமற்ற பராமரிப்பு டயமன்ட் கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதுடன், UCW இன் 3 ‘R’கள் (Recognise, Reduce & Redistribute), ‘அங்கீகரித்தல், குறைத்தல் மற்றும் மறுபகிர்வு’ மற்றும் UCW இல் ILO கட்டமைப்பின் கூடுதல் ‘R’ ஆகியவற்றை செயல்படுத்துதல் குறித்து கருத்து வெளியிட்டார். இது குறிப்பாக தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்குப் பொருந்தக்கூடிய வளர்ச்சிக் கட்டமைப்பிற்குள் UCW ஐ கருத்தாக்கம் செய்யும் பெண்ணியவாதிகளின் மிகவும் சுவாரஸ்யமான மதிப்பீடாகும்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து, மனித உரிமைச் செயற்பாட்டாளர் எனஅறியப்படும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமை உரை நிகழ்த்தினார். இலங்கையில் UCW ஐ அங்கீகரிப்பதன் அவசியத்தையும், குறிப்பாக இலங்கை எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்குள், பிரச்சினை பற்றிய முக்கியமான புரிதலை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கினார்.
பிராந்திய மாநாடு ஐந்து குழு விவாதங்களை மையமாகக் கொண்டது, அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்டஆய்வுப் பகுதியில் கவனம் செலுத்துகின்றன. பால்நிலைப் பொருளாதார உறவுகள் மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணி, ஊதியமற்ற பராமரிப்புப் பணியை அளவிடுதல் மற்றும் மதிப்பிடுதல், ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளைச் சுற்றியுள்ள சமூக ஊடகப் பேச்சுகள், UCW மற்றும் வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்கள், பெண் கூட்டுறவு உறுப்பினர்கள் மற்றும் வடக்கில் ஊதியம் மற்றும் ஊதியமற்ற பராமரிப்பு பணி, பாலியல் அடையாளங்கள், மற்றும் ஊதியமற்ற பராமரிப்பு வேலைகள் அத்துடன் வீட்டைப் பொறுத்தவரை UCW இல் கொவிட்-19 இன் தாக்கம் என்பன சார்ந்ததாக குழு விவாதங்கள் அமைந்திருந்தன.
மாநாட்டில் WMC மற்றும் SSA ஆய்வின் ஒரு பகுதியாக இருந்த பெண்களின் வாழ்க்கையை படம்பிடித்தன் “Working Hours” என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை ஷானி ஜெயவர்த்தன தயாரித்துள்ளார்.
நாள் 1
நாள் 2