Civil Society plan to review 20 years of Beijing Platform for Action

பெண்ணிய மற்றும் பெண்கள் உரிமைகள் வலையமைப்புக்களின், அங்கங்களின், கூட்டமைப்புக்களின் பரந்த கூட்டணியானது, ஆசிய மற்றும் பசுபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (UN ESCAP) நடவடிக்கைக்கான பெய்ஜிங் பிரகடனம் மற்றும் தளத்திற்கான பிராந்திய மற்றும் உலகளாவிய மீளாய்வுக்கு தயாராகி வருகின்றன.

பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதாரம் உள்ளடங்கலாக பெண்களின் மனித உரிமைகள் தொடர்பான விசேட நிபுணத்துவத்தினைக் கொண்டு தயார்ப்படுத்தலுக்கு உதவும் வகையில், பிராந்திய வலையமைப்புக்கள், சுதேச, புலம்பெயர், மாற்றுத்திறனுடைய பெண்கள், இளைஞர்கள், LBT பெண்கள், துணை பிராந்திய பிரதிநிதிகள், மற்றும் குழுக்கள் உள்ளடங்கலாக தொகுதி சார் குழுக்கள், உள்ளடங்கிய 16 நிறுவனங்களின் சிவில் சமூக செயற்பாட்டு குழுவானது உருவாக்கப்பட்டது.

அரசாங்கங்களினால் 20 வருடங்களுக்கு முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தேர்ச்சியை மீளாய்வுசெய்வதற்கும், நேர்த்தியான, நம்பகமான மற்றும் பொருந்தும் செயற்பாடுகளை கோருவதற்கும், வௌிப்படையான மற்றும் செல்வாக்கு நிறை வகிபாகத்தையும் ஆசிய பசுபிக் சிவில் சமூகம் கொண்டுள்ளமையை உறுதி செய்வதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது.

பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவுூட்டல் தொடர்பான UN ESCAP ஆசிய மற்றும் பசுபிக் மாநாட்டிற்கு: பெய்ஜிங் +20 மீளாய்விற்கு முன்பதாக நவம்பர் மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பெங்கொக்கில் நடைபெறவுள்ள சிவில் சமூக மன்றத்திற்கு வசதியளிக்கும் வகையில் இந்த குழு ஒத்துழைப்பு வழங்கும். பிராந்திய மற்றும் உலகளாவிய அறிக்கை சேகரத்தில், ஐ.நா நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளல் மற்றும் மீளாய்வின் உலகளாவிய செயற்பாட்டில் பிராந்திய குரல்களின் தாக்கத்தை உறுதி செய்தல் போன்ற உள்ளீடுகளையும் அவர்கள் வழங்குவர்.

Women and Media Collective: Dr. Sepali Kottegoda, Executive Director and Chair of Asia Pacific Women’s Watch (APWW), Kumuduni Samuel Programme/Research Associate and on the Executive board of Development Alternatives with Women for a New Era (DAWN). Others: Steering Committee Members (APWW) – Carole Shaw (Vice Chair), Dr. Pam Rajput, Luz Martinez and Nalini Singh.

பெய்ஜிங் பிரகடனத்தின் நம்பகத்தன்மை மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தும்தேவையை சிவில் சமூகங்கள் வலியுறுத்தியுள்ளன. 20 வருடங்களுக்கு முன்னர் அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாகவும், ஒன்றிணைக்கப்பட்ட வகையிலும் மதிக்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டில், ஐ.நாவானது செப்ரம்பர் பொது அமர்வின் போது உலகளாவிய மாநாட்டினை ஐ.நா நடத்தும். இதன் போது, பெய்ஜிங் பிரகடனத்தில் இருந்து நடைமுறைப்படுத்தலுக்கான முன்னுரிமையான விடயங்களை அரசாங்கங்கள் அடையாளம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், செயற்படுவதற்கான முக்கிய உறுதிமொழிகளையும், நடைமுறைப்படுத்தலுக்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வழிகளையும் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகஸ்ட் 18-20 காலப்பகுதியில் பெங்கொக்கில் நடைபெற்ற சமூக அபிவிருத்திக் கூட்டம் தொடர்பான UN ESCAP குழுவில், சிவில் சமூகத்தினால் [2] சில முக்கிய இடையீடுகளை மேற்கொள்ளக் கூடியதாகவிருந்தது:

CSO Opening Statement to ESCAP

CSO statement on Inequalities at the 3rd session of the Commission on Social Development

CSO Statement on Sexual Rights and Health Rights; Gender Inequalities, Discrimination, and Violence; and Conflict

CSO Statement on Civil Society Voice and Inclusion of Women with Disabilities

CSO Statement on Accountability

CSO Statement on Human Rights, Development and Peace

CSO Closing Statement to ESCAP