Call for Submissions: WMC Women’s Photography Exhibition 2014 (Postponed)

WMC Photography exhibitionஎமது முந்தைய கண்காட்சிகளின் வெற்றி மற்றும் பெறப்பட்ட சாதகமான பிரதிபலிப்புகளின் காணரமாக, பெண்களின் புகைப்படக் கண்காட்சிக்கு தமது படைப்புக்களை அனுப்பி வைக்குமாறு இலங்கையில் உள்ள அனைத்து பெண் புகைப்படக் கலைஞர்களிற்கும் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.

பிரதானமாக ஆண்களினால் ஆதிக்கம் செலுத்தப்படும் தொழில் துறையில் பெண் புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்களை காட்சிப்படுத்துவதற்கான தனித்துவமான சந்தர்ப்பத்தை இந்த நிகழ்வு வழங்கியது. துறைசாராத மற்றும் நிபுணத்துவ பெண் புகைப்படக் கலைஞர்கள் என இரு தரப்பினருக்கும் தமது திறன்களை பரந்து பட்ட மக்கள் பார்வைக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் 30வது வருட நிறைவினை கொண்டாடும் வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் 25-28 வரையான காலப்பகுதியில் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

எதிர்வரும் கண்காட்சியில் உங்கள் ஆக்கத்திறன் மிக்க படைப்புகளும் இடம்பெறுவதற்கு இலங்கையில் உள்ள அனைத்து பெண் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். இந்த வருட கண்காட்சியின் தொனிப்பொருளாக “பணிசெய்யும் பெண்கள்” என்பது அமைவதுடன், இந்த தொனிப்பொருள் சார்ந்ததாகவே அனைத்து சமர்ப்பிக்களும் அமைதல் வேண்டும். சுயாதீன நிபுணத்துவ குழுவானது கண்காட்சிப்படுத்த வேண்டிய புகைப்படங்களை தெரிவுசெய்யும். தகுதிப் பெற்ற புகைப்படங்களுக்கு சிறப்புத் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி: 2014 ஒக்டோபர் முதலாம் திகதி

விண்ணப்பப் படிவம் (ஆங்கிலம்): http://bit.ly/1p1r2zM

சிங்கள படிவம்: http://bit.ly/1sX7PGY

தமிழ் படிவம்: http://bit.ly/1l028p6

மேலதிக தகவல்களுக்கு 011 2690192 மற்றும் 011 5632045 என்ற இலக்கங்களில் தொடர்புகொள்ளவும் அல்லது photography.wmc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், உங்களின் விரைவான பதிலை எதிர்பார்க்கின்றோம்.