World Conference on Women’s Studies 2015

பெண்ணியல் கற்கைகள் தொடர்பான முதலாவது வருடாந்த உலக மாநாடு (WCWS) – 2015, இலங்கையின் கொழும்பு நகரில் 2015 மார்ச் மாதம் 24 முதல் 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. “பால்நிலை அடிப்படையிலான பாரபட்சத்தை இல்லாதொழித்தல்” என்பதே இம்மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

பெண்ணியல் கற்கைகள் துறையில் மேற்கொள்ளப்பட்ட கல்விசார் ஆய்வுகள் மற்றும் விடய ஆய்வுகளுடைய பெறுபேற்றின் தகவல் பரிமாற்றத்தை உத்வேகப்படுத்துவதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை இல்லாதொழிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தியதாகவே கருத்தாடல்கள் அமையவுள்ளன. இந்த சந்திப்பானது ஆழமானதொரு கருத்துப்பதிவை ஏற்படுத்துமென நாம் நம்புவதோடு, உங்களுக்கு எது தேவை என்பதை நீங்கள் கண்டறிந்து கொள்வதற்குரிய சிறந்ததொரு வாய்ப்பாகவும் அது அமையும்.

உலகம் பூராகவும் இத்துறையில் அக்கறையுள்ள கல்வியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் என அனைவரையும் இந்த மாநாடு ஒன்றுதிரட்டுகின்றது. முன்மாதிரியான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சான்று அடிப்படையிலான விடய ஆய்வுகள் ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலதிகத் தகவல்களுக்கு மாநாடு குறித்த இணையத்தளமான www.womenstudies.co எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

சுருக்கக் குறிப்புக்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2015 பெப்ரவரி 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய பதிவுகளுக்கான இறுதித் திகதி 2015 பெப்ரவரி 15 ஆகும்.