Category: news

Media Statement- Protest letter on abduction of journalist Krishni Ifham

2009 ஜுன் 24 அன்று பத்திரிகையாளர் கிறிஷ்னி இவ்ஹாம் கடத்தப்பட்டதைக் கண்டித்து எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு ஊடக அறிக்கையானது எல்லா பெண் சிவில் சமூக நிறுவனங்களாலும் விநியோகிக்கப்பட்டது. அது தொடர்பான கூற்றுக்களும் தொடர்புடைய ஆவணங்களும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

National Convention 2009

WMC ஆனது 2009 பெப்ருவரி 6 – ஆம் திகதி வரையில் அதனது பங்காளர் பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து கண்டி திலங்கா ஹோட்டலில் ஒரு தேசிய சமவாயத்தை ஒழுங்கு செய்திருந்தது. நாட்டின் எல்லாப் பாகங்களில் இருந்து பல்வேறுபட்ட பெண்கள் நிறுவனங்களில் இருந்தும் மொத்தமாக 41 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டமானது கலந்துரையாடல், எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளல், என எல்லாப் பங்குபற்றுனர்களும் பல கவனத்திற்குரிய பிரச்சினைகளை கலந்துரையாடும் கூட்டமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

WMC condemns recent attack on MTV/MBC Studio complex

மகாராஜா ஒலி, ஒளிபரப்பு வலைப்பின்னலின் கலையகக் கட்டிடத்தொகுதியின் அண்மைய தாக்குதலுக்கு எதிராகக் கண்டனம் விடுத்து WMC ஆனது ஒரு ஊடகக அறிக்கையை வெளியிட்டது.

WMC condemns killing of Lasantha Wickrematunge

லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை (08.01.2009) பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு கண்டிக்கிறது. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை கண்டித்தும், ஊடக சுதந்திரத்தின் அழுத்தத்திற்கு எதிராகவும் ஜனவரி 09 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட மறியல் போராட்டத்தில் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு பங்குபற்றியது. அத்துடன் கொலைசெய்யப்பட்ட ஊடவியலாளரின் மரண ஊர்வலத்தில் ஜனவரி 12 ஆம் திகதி பங்குபற்றிய பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு, ஊடகத்திற்கு எதிரான அண்மைய தாக்குதல்களைக் கண்டித்து ஊடக அறிக்கைச் ஒன்றையயும் வெளியிட்டது.

Caroline Anthony Pillai celebrates 100th birthday

WMC மற்றும் சமூக விஞ்ஞானிகள் சங்கம் ஒக்ரோபர் 08ஆம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் கரோலின் அந்தோனிப்பிள்ளையை கௌரவிக்கும் முகமாக ஒரு கட்டுரையை பிரசுரித்தது. இவர் இலங்கை சம சமாஜ கட்சியின் ஸ்தாப உறுப்பினராகவும், 1930 களில் சிலோன் தேசியவாதிகள் இயக்கத்தின் துடிப்பான பங்குபற்றுனராகவும் இருந்திருந்தார். இக்கட்டுரையானது சிங்களம், தமிழ்  மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது.

International Peace Day 2007

செப்ரெம்பர் 21 – 
2007 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி சர்வதேச சமாதானத்தை குறிக்கும் முகமாக பெண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான கலைவேலைப்பாட்டு வீதிக்கண்காட்சி இடம்பெற்றது. கலைவேலைப்பாடு உடைய இப் பதாதைகளானவை சமாதானத்தைக் கருப்பொருளாகக் கொண்டிருந்ததுடன் இலங்கை பூராகவும் வேறுபட்ட பகுதிகளிலுள்ள பெண்கள் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. WMCஇந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

Protest to stop eviction of Tamils from Colombo

ஜுன்  8 – 2007 
நிறுவனங்களையும் தனிநபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்திலிருந்தான அக்கறையுடையோர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் 12.00 – 1.00 மணி வரைஎதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கினர்.தமிழர்களை கொழும்பின் தங்குமிடங்களில் இருந்து விரட்டி 300 க்கு மேற்பட்ட தமிழர்களை அவர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களிலிருந்து விரட்டி, யாழ்ப்பாணத்திற்கும், திருகோணமலைக்கும் அனுப்பி வைப்பதற்கு ஜுன் 7 ஆம் திகதி அரசு நிர்ப்பந்தித்ததற்கு எதிராகவே இதை நடத்தினர். WMCவும் இந்நிகழ்விற்கு வசதிப்படுத்திய குழுக்களில் அடங்கியிருந்தது. 
புகைப்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

Protest against abductions and the two Red Cross staff who were killed

ஜுன் 6 
 WMC யினர் “உங்களின் கவலையை நாங்கள் பகிரந்துகொள்கின்றோம்” “வாழும் உரிமையைப் பாதுகாப்போம்” மற்றும் “பொதுமக்களைக் கொலைசெய்வதை நிறுத்து” எனச் சிங்களத்திலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாதைகளைக் கொண்டிருந்தனர். கடத்தல்களையும், கொலைகளையம் தாம் அங்கீகரிக்காததைக் காட்டும் முகமாக போராட்டம் செய்தோர் கறுத்த முகமூடிகளால் தமது வாயை மூடியிருந்தனர்.

International Women’s Day 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த … Continue reading International Women’s Day 2007