Category:

Media Briefing on Increasing Women’s Participation at the 2010 Parliamentary Election

தேர்தலிலே பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்கள் மீதும், குறிப்பாக  பாராளுமன்றத் தேர்தலில் பெண்களின் நியமன எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், எல்லாக் கட்சி பிரதிநிதிகளும் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று 2010 பெப்ருவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் பேசிய சிலரில் மாகாணசபை உறுப்பினர் அசோக்கா லங்கதிலக்கே மற்றும் றோசி சேனநாயக்க மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சாந்தினி கொங்கககே என்பவர் உட்படுகின்றனர்.

Nominations and Votes for Women

இலங்கைப் பெண்கள் பாராளுமன்றத்தில் 6% க்கு குறைவாகவும், மாகாணசபைகளில் 5% க்கு குறைவாகவும் உள்ளுராட்சி சபைகளில் 2% க்கு குறைவாகவும் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிபரங்களானவை தென்னாசியாவில் மிகவும் குறைவாக உள்ளதுடன், இலங்கையே இப்பிராந்தியத்தில் உள்ளுராட்சிசபைகளில் பெண்களுக்கான ஒரு கோட்டா முறை அற்ற நாடாக உள்ளது. இந்தப் பிரதிநிதித்துவத்திற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பது என்னவெனில் பெண் வேட்பாளர்களுக்கு போதிய நியமனங்களைக் கொடுப்பதில் அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுவது தான். அடுத்த உள்ளுராட்சிசபைத் தேர்தலானது விரைவில் நடைபெறவிருப்பதால் WMC ஆனது … Continue reading Nominations and Votes for Women

Bus, Sticker and White Ribbon Campaign – 16 days of Activism Against Gender-Based Violence


In commemoration of International Day for the Elimination of Violence Against Women which falls on the 25th of November, the GBV Forum has launched a 16 day campaign (25th November to 10th December) to end violence against women.   GBV Forum’s 2008 slogan “Violence Against Women Hurts Us All … ACT NOW – End Violence … Continue reading Bus, Sticker and White Ribbon Campaign – 16 days of Activism Against Gender-Based Violence


Exhibition of Women’s Activism

“அப்போதிருந்து இப்போது வரைக்கும் அவளது பாதச் சுவடுகள்” இலங்கையில் பெண்கள் இயக்கத்தின் வரலாற்றின் மைல் கற்களை எடுத்துக்காட்டும் பெண்கள் நிறுவனங்களால் அவற்றின் விருத்திக்காக செய்யப்பட்டோரின் பங்களிப்புக்களை எடுத்துக்காட்டும் இக்கண்காட்சியானது WMC வினால் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27 ஆம், 28 ஆம் திகதியில் நடத்தப்பட்டது. இக்கண் காட்சியானது பெண்களும் அரசியலும், ஊடகத்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம், சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டங்கள், சமாதானத்திற்காக பெண்களின் குரல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற விடயங்களையும் பொருள்களாக கொண்டிருந்தது.

International Peace Day 2008

WMC ஆனது 2008 செப்ரெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி பல தொலைக்காட்சி நிலையங்களும், வானொலி நிலையங்களும் ஒளி/ஒலி பரப்பிய சமாதான கீதத்தை ஒளி/ஒலிபரப்பும் இசைநிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியது. பின்வரும் அலைவரிசைகள் தெரண தொலைக்காட்சி – சமாதான தின இசை நிகழ்ச்சி சுவர்ணவாஹினி – Hada Randi Paya சிங்கள வர்த்தக சேவை – FM 93.3, 106.9, 96.9 தென்றல்  FM – FM 104.8, 105.6, 107.9 ஆங்கல வர்த்தக சேவை  – … Continue reading International Peace Day 2008

International Day for the Elimination of Violence Against Women 2006

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது 2006 நவம்பர் 28 ஆம் திகதி.இதை கொழும்பில் கொண்டாடும் முகமாக ஒரு சிறு நாடக விழாவும், இசை நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது. இவ்விழாவின் கருப்பொருளாக இருந்தது ‘வன்முறைகளில்லாத நாளை’ என்பதாகும். இவ் விழாவானது பொதுமக்களுக்கு கட்டணமின்றி திறந்துவிடப்பட்டிருந்ததுடன், WMC ஆனது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தும் விழிப்புணர்வை பொதுமக்களிடையே எழுப்புவதற்கு இச் சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.

Submission of “Human Rights and Humanitarian Concerns of Women”

செப்ரெம்பர் 8 – இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு மற்றும் INFORM என்பன கூட்டாக மனிதஉரிமைகள் மற்றும் பெண்களின் மனிதநேய அக்கறைகள்” எனும் ஆவணத்தை 2006 செப்ரெம்பர் 12 ஆம் திகதி Brussels இல் நடைபெற்ற இணைத்தலைமை கூட்டத்தில் கூட்டாக சமர்ப்பித்திருந்தனர். மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைப்பின் நிபுணர்கள் குழுவிடம் பால்நிலை விடயங்கள் தொடர்பான பல்வேறு பெண்கள் குழுக்களால் நியமிக்கப்பட்ட விடயங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. கூற்றைப் பார்க்குக.