Category: Publications

Exhibition of Women’s Activism

“அப்போதிருந்து இப்போது வரைக்கும் அவளது பாதச் சுவடுகள்” இலங்கையில் பெண்கள் இயக்கத்தின் வரலாற்றின் மைல் கற்களை எடுத்துக்காட்டும் பெண்கள் நிறுவனங்களால் அவற்றின் விருத்திக்காக செய்யப்பட்டோரின் பங்களிப்புக்களை எடுத்துக்காட்டும் இக்கண்காட்சியானது WMC வினால் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27 ஆம், 28 ஆம் திகதியில் நடத்தப்பட்டது. இக்கண் காட்சியானது பெண்களும் அரசியலும், ஊடகத்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம், சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டங்கள், சமாதானத்திற்காக பெண்களின் குரல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற விடயங்களையும் பொருள்களாக கொண்டிருந்தது.

International Peace Day 2008

WMC ஆனது 2008 செப்ரெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி பல தொலைக்காட்சி நிலையங்களும், வானொலி நிலையங்களும் ஒளி/ஒலி பரப்பிய சமாதான கீதத்தை ஒளி/ஒலிபரப்பும் இசைநிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியது. பின்வரும் அலைவரிசைகள் தெரண தொலைக்காட்சி – சமாதான தின இசை நிகழ்ச்சி சுவர்ணவாஹினி – Hada Randi Paya சிங்கள வர்த்தக சேவை – FM 93.3, 106.9, 96.9 தென்றல்  FM – FM 104.8, 105.6, 107.9 ஆங்கல வர்த்தக சேவை  – … Continue reading International Peace Day 2008

Radio Spot Advertisements

WMC ஆனது அமைதி தொடர்பான ஆய்வுப்பொருட்களை ஊக்கப்படுத்தி 6 மாதக் காலப்பகுதிக்கான 30 செக்கன் குறுவிளம்பரங்களை தொடர்ச்சியாக ஒலிபரப்புச் செய்தது. இவ் விளம்பரங்களானவை நாளாந்தம் சிங்கள தேசிய சேவையில் (98.3 FM) இல் காலை 6.00 மணிச் செய்தி மற்றும் சிங்கள வர்த்தக சேவை (93.3 FM) காலை 6.30 மணிச் செய்திக்கு முன்பாக ஒலிபரப்புச் செய்யப்பட்டன.

TV Campaign on Women’s Political Participation

‘நாங்கள் பெண்கள்’என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அரசியல் நிறுவனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக ஒரு தொலைக்காட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டது, அது WMC ஆனது சமாதானத்தைப் பாதுகாக்கும் பெண்களின் அமைப்பின் ஆதரவுடன் இணைந்து செய்தது. இரண்டு தொலைக்காட்சி விளம்பரங்கள் 2008 ஆகஸ்டில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டதுடன், அவை தெரண, சிரச தொலைக்காட்சிகளிலும் தமிழ் விளம்பரங்களானவை சக்தி ரிவியிலும் ஒலிபரப்பப்பட்டது. விளம்பரங்களானவை ஜனவரி மத்தியில் இருந்து பெப்ருவரி வரை ஒலிபரப்பப்பட்டது.

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

மே, ஆகஸ்ட் 2008
 – 
WMC ஆனது 2007ஆம் ஆண்டிலே இக் கருத்திட்டத்தை முன்னெடுத்ததுடன், 2008 ஆம்ஆண்டு வரையும் உள்ளுராட்சித் தேர்தல்களில் பங்குபற்றுவதற்கான அவர்களின் இயலுமையைக் கட்டியெழுப்புதல் நல்லாட்சியில் அவர்கள் தகுதிபெற உதவுதல் போன்ற அதனது அதே இலக்குகளைக் இலக்காகக் கொண்டு அது தொடர்ந்து இருந்தது. அவதானிப்புக் குழுக்களானவை தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளாகிய குருணாகலை, மொனராகலை, பதுளையில் தமது கண்காணிப்புக்களைத் தொடர்ந்து செய்து வந்தன. மொத்தமாக 3 மாவட்டங்களிலே உள்ள 14 உள்ளுராட்சி சபைகளை 25 … Continue reading Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

People’s SAARC

தென்னாசிய மக்கள் ஒன்று கூடுகை  People’s Assembly (People’s SAARC 2008) ஆனது ஜுலை 18, 19, 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்றது. 1993 இலிருந்து பிராந்திய ஒத்துழைப்பிற்கான தென்னாசிய சங்கத்தின் அரச தலைவர்களுடைய கூட்டத்திற்கு சமாந்தரமாக, தென்னாசியா பூராகவுமான, ஒழுங்கானதும் தொடர்ந்து நடைபெறுவதுமான கூட்டுழைப்புக் கலந்துரையாடல் தந்திரோபாயப்படுத்தல், மற்றும் செயற்பாட்டுச் செயன்முறையானது 1993 இலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. WMC ஆனது மக்கள் பேரணியை ஒருங்கிணைப்புச் செய்ததுடன், இக்கூட்டத்தின் இறுதி நாளிலே … Continue reading People’s SAARC

Submission of the Migrant Rights NGO Shadow Report titled “The Sri Lanka NGO Shadow Report on the International Convention on the Protection of the rights of all Migrant Workers and their families,” to the Committee on Migrant Workers.

ஜுன் 2008
 – 
எல்லாப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மீதான சர்வதேச சமவாயமானது இலங்கையால் 1996 ஆம் ஆண்டு ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. இச்சமவாயமானது 2003 இல் அமுலுக்கு வந்தது. 2008 ஏப்ரலில் இலங்கை அரசாங்கமானது சமவாயத்தின் கீழான தனது கடப்பாட்டின் ஒரு பகுதியாக முதலாவது பருவகால நாட்டு அறிக்கையை புலம்பெயர் மீதான குழுவுக்கு சமர்ப்பித்தது. 2006 இல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வலைப்பின்னல் செயற்பாடு (ACTFORM) WMC என்பன புலம்பெயர் மீதான … Continue reading Submission of the Migrant Rights NGO Shadow Report titled “The Sri Lanka NGO Shadow Report on the International Convention on the Protection of the rights of all Migrant Workers and their families,” to the Committee on Migrant Workers.

Forum Theatre

மேடை அரங்காற்ருவோர் குழுவானது WMC வினை அணுகி அவர்களின் அடுத்த  அரங்கத் தயாரிப்புக்காக நிதி ஆதரவு கேட்டிருந்தனர். அது 2008 மார்ச் 08 – 12 ஆம் திகதி வரை நிகழ்வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. ஆற்றுகைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த தலைப்புக்களாக, குடும்ப வன்முறை மற்றும் இன முரண்பாடு என்பன அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பின் நோக்கமானது வேறுபட்ட நோக்கங்கள் உள்ள ஆட்களை கருத்துக்களைப் பரிமாறுவதற்கு தூண்டுவதும், ஒரு பொதுவான பிரச்சினையை வேறுபட்ட கருத்துடையவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை பார்க்கத் … Continue reading Forum Theatre