Category: New Media

Local Government Election 2011

WMC ஆனது 2011 உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களின் நியமனங்களையும், பெண்களுக்கான வாக்குகளையும் அதிகரித்துக் கொள்வதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டது. (பிரச்சார விபரங்களுக்காக ஊடகப் பக்கத்தைப் பார்க்குக.) WMC வினால் மொத்தமாக 181 பெண்கள் வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டதுடன், 72 பேர் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர். இவ் வேட்பாளர்களில் 11 பெண்களுக்கு உள்ளுராட்சித் தேர்தலில் தங்களின் உரிய மாவட்டங்களில் வாக்களிக்கப்பட்டது. (காலி – 2, திருகோணமலை -1, குருணாகலை -3, பதுளை – 5)

WMC 25th Anniversary

பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு ஆனது பெண்கள் செயற்பாட்டில்  தனது 25 ஆண்டு விழாவை பல்வேறு தொடரையும் ஒழுங்குசெய்து கொண்டாடியது. இக் கொண்டாட்டத்தின் கருப்பொருளாக இருந்தது “மாறும் மனங்கள்” – பெண்களும் பார்வைநோக்கு மாற்றங்களும் -ஏனையோரைப் பற்றி எவ்வாறு பெண்கள் எண்ணங்கள் மாறுகின்றன, பெண்களைப் பற்றி எவ்வாறு ஏனையோரின் எண்ணங்கள் மாறுகின்றன, தம்மைப் பற்றி எவ்வாறு பெண்களின் எண்ணங்கள் மாறுகின்றன என்பதுவாகும். இவ் எண்ண மாற்றம் குறித்த பிரதான நிகழ்வானது பெண்களைப் பற்றி நடத்தப்பட்ட கண்காட்சி ஆகும்.  இலங்கையில் … Continue reading WMC 25th Anniversary

Exhibition of Women’s Activism

“அப்போதிருந்து இப்போது வரைக்கும் அவளது பாதச் சுவடுகள்” இலங்கையில் பெண்கள் இயக்கத்தின் வரலாற்றின் மைல் கற்களை எடுத்துக்காட்டும் பெண்கள் நிறுவனங்களால் அவற்றின் விருத்திக்காக செய்யப்பட்டோரின் பங்களிப்புக்களை எடுத்துக்காட்டும் இக்கண்காட்சியானது WMC வினால் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27 ஆம், 28 ஆம் திகதியில் நடத்தப்பட்டது. இக்கண் காட்சியானது பெண்களும் அரசியலும், ஊடகத்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம், சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டங்கள், சமாதானத்திற்காக பெண்களின் குரல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற விடயங்களையும் பொருள்களாக கொண்டிருந்தது.

Annual Women’s National Convention 2006

9 – 11 ஜனவரி 2007
 வாதுவ – இலங்கை 
பெண் செயற்பாட்டாளர்களுக்கான 2006 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தேசிய சமவாயம் 2007 ஜனவரியில் இடம்பெற்றது. கண்டி, நுவரெலிய, மொனராகலை, புத்தளம், கேகாலை, கம்பஹா, குருணாகல, மற்றும் கொழும்பு உட்பட பல மாவட்டங்களிலிருந்து 31 பெண் செயற்பாட்டாளர்கள் இதில் பங்குபற்றினர். WMC ஆனது அதனது முதலாவது வருடாந்த தேசிய சமவாயத்தை 1984 ஆம் ஆண்டு பெண் செயற்பாட்டாளர்களுக்காக நடாத்தியது. ஜனநாயகம் மற்றும் முரண்பாட்டின் பரந்துபட்ட ஆய்வுப்பொருட்களுடன் தொடர்புடைய … Continue reading Annual Women’s National Convention 2006