Category:

Billboards on the Prevention of Domestic Violence Act

ஜனவரி 2007, ஆகஸ்ட் 2007
  –  WMCஆனது இலங்கை ஒக்ஸ்பாம்  மற்றும் ‘எம்மால் முடியும்’ பிரச்சாரத்தி உதவியுடனும் நாடு பூராகவும் 8 இடங்களில் விளம்பரப்பலகைகளைக் காட்சிப்படுத்தியது. (வடக்கைத் தவிர) விளம்பரப் பலகைகளை 2007 மேயில் இருந்து மூன்று மாதங்களுக்கு காட்சிப்படுத்தியது. சிங்கள மொழி விளம்பரப் பலகைகள் கண்டி, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், வெலிசறவிலும், தமிழ்மொழி விளம்பரப்பலகைகள் திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, ஹட்டனிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
சிங்கள மற்றும் தமிழ் விளம்பரப் பலகைகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

Annual Women’s National Convention 2006

9 – 11 ஜனவரி 2007
 வாதுவ – இலங்கை 
பெண் செயற்பாட்டாளர்களுக்கான 2006 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தேசிய சமவாயம் 2007 ஜனவரியில் இடம்பெற்றது. கண்டி, நுவரெலிய, மொனராகலை, புத்தளம், கேகாலை, கம்பஹா, குருணாகல, மற்றும் கொழும்பு உட்பட பல மாவட்டங்களிலிருந்து 31 பெண் செயற்பாட்டாளர்கள் இதில் பங்குபற்றினர். WMC ஆனது அதனது முதலாவது வருடாந்த தேசிய சமவாயத்தை 1984 ஆம் ஆண்டு பெண் செயற்பாட்டாளர்களுக்காக நடாத்தியது. ஜனநாயகம் மற்றும் முரண்பாட்டின் பரந்துபட்ட ஆய்வுப்பொருட்களுடன் தொடர்புடைய … Continue reading Annual Women’s National Convention 2006

International Day for the Elimination of Violence Against Women 2006

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது 2006 நவம்பர் 28 ஆம் திகதி.இதை கொழும்பில் கொண்டாடும் முகமாக ஒரு சிறு நாடக விழாவும், இசை நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது. இவ்விழாவின் கருப்பொருளாக இருந்தது ‘வன்முறைகளில்லாத நாளை’ என்பதாகும். இவ் விழாவானது பொதுமக்களுக்கு கட்டணமின்றி திறந்துவிடப்பட்டிருந்ததுடன், WMC ஆனது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தும் விழிப்புணர்வை பொதுமக்களிடையே எழுப்புவதற்கு இச் சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.

Media Strategies on Raising Awareness and Implementation of the Prevention of Domestic Violence Act

WMC ஆனது 2006 ஜுன் 21 ஆம் திகதியன்று வீட்டு வன்முறை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்துவது மீதான ஊடகத் தந்திரோபாயங்களை இனங்காணுவதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடாத்தியது. ஊடக நிறுவனங்கள் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் நிறுவனங்களைச் சேர்ந்த பெண்கள் இதில் பங்குபற்றினர். இக்கூட்டமானது வீட்டு வன்முறை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் புதிதாக சட்டமாக்கப்பட்ட சட்டம் என்பவற்றை உள்ளடக்கிய வீட்டு வன்முறை தடைச்சட்டத்தை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை கொண்டுள்ள  ‘பெண்கள் … Continue reading Media Strategies on Raising Awareness and Implementation of the Prevention of Domestic Violence Act

“Rala Matha Andi Roo” TV Programme

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சிங்கள மற்றும் தமிழ் தொலைக்காட்சி நிகழச்சிகள் ஜ் அலைவரிசை மற்ரும் ரி.என்.எல் இல் 2007, 5 ஜுலையில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. பெண்கள் தீர்மானம் எடுப்பதில் பங்குபற்றுதல், காணியுரிமை, வீட்டு வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஜீவனோபாயம், முரண்பாடு, சமாதானம், அமைதி மற்றும் சுனாமி மீதான விடயங்கள் கலந்துரையாடலில் உட்படுத்தப்பட்டிருந்தன.