Category: Photos/Videos Politics

International Women’s Day 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த … Continue reading International Women’s Day 2007

“Women say No to War”

WMC ஆனது இலங்கை ஜனாதிபதி மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ஷவுக்கும், விடுதலைப்புலிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும், மற்றும் ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் செய்திப் பத்திரிகைகளுக்கும் பொறுப்பாக நடந்துகொள்ளும்படியும் இருதரப்பினரையும் கொல்லுவதை நிறுத்திக்கொள்ளும்படியும் கேட்டு இக் கூற்றை அனுப்பிவைத்திருந்தது. இக் கூற்றானது 118 பெண்களின் கையெழுத்துடன் அனுப்பட்டிருந்தது. இலங்கை செய்திப்பத்திரிகைகளான சண்டே ரைம்ஸ், லங்கா தீப, வீரகேசரியில் இக் கூற்றானது மே21 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டதுடன் 2006 ஆம் ஆண்டு 24 ஆம் திகதி டெயிலி நியூசிலும் பிரசுரிக்கப்பட்டது.

Vesak Banner Campaign

சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரி 2006 மே வெசாக் மாதத்தில் ஒரு பதாதை பிரச்சாரத்தை மேற்கொண்டனர். எல்லா சுலோகங்களும் புத்தசமயம் தொடர்பானதாக இருந்ததுடன் 36 பதாதைகள் சிங்களத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவ் பதாதைகளானவை பந்தல்கள் (வெசாக்கிற்கு பயன்படுத்தப்படும் ஒளியூட்டிய கட்டமைப்புக்கள்) பிரபல்யமான கோயில்கள் மற்றும் கொழும்பு அநுராதபுரம், கட்டுநாயக்க, பொலநறுவை மற்றும் காலியிலுள்ள பெரிய சுற்றுவட்டங்கள் என்பவற்றில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.