Category: Video

YA TV – Point of View

YATV ஆனது WMC மற்றும் “சர்வதேச பெண்கள் பிரச்சாரம்” என்பவற்றின் கூட்டுழைப்புடன் புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி உரைக்காட்சித் தொடரினை 2008 செப்ரெம்பரில் இருந்து அறிமுகம் செய்தது. இத் தொடரானது பெண்களின் சமூகம் மட்டிலான அனுபவங்களையும் சமூகத்திற்கான பங்களிப்புகளையும் முக்கியப்படுத்தியிருந்தது.

WMC Film Festival 2006

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி 2006 மார்ச் 20, 21, 22 ஆம் திகதிகளில் ஒரு பெண்ணிய திரைப்பட விழாவானது கொழும்பு ரஷ்ய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. அத்திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படங்களாவன 
கார்முஷ் பாணி (பாக்கிஸ்தானி பஞ்சாப்பில் உள்ள ஒரு முஸ்லிமுக்கு திருமணமான முன்னாள் இந்திய சீக்கிய பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியதும், இந்திய பிரிப்பு பற்றியதுமானது) – 
பக்கம் 3 ( பக்கம் 3, பெண் பத்திரிகையாளர் பற்றியதும் அவளுடைய மிகவும் அர்த்தபுஷ்டியான பத்திரிகை அறிக்கைகள் மற்றும்அவளுடைய அதிகமான … Continue reading WMC Film Festival 2006

Animated TV Advertisements

புரிந்துணர்வு ஒப்பந்தமானது பாதுகாக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து 2006 ஆம் ஆண்டு பெப்ருவரி 22, மற்றும் 23 ஆம் திகதிகளில் மூன்று மொழிகளிலும் 30 வினாடி தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இவ்விளம்பரங்களாவன சக்தி ரிவி, சிரச ரிவி, எம் ரிவி, சுவர்ணவாஹினி ஆகியவற்றின் மூலம் ஒளிபரப்பப்பட்டன.

“Rala Matha Andi Roo” TV Programme

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சிங்கள மற்றும் தமிழ் தொலைக்காட்சி நிகழச்சிகள் ஜ் அலைவரிசை மற்ரும் ரி.என்.எல் இல் 2007, 5 ஜுலையில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. பெண்கள் தீர்மானம் எடுப்பதில் பங்குபற்றுதல், காணியுரிமை, வீட்டு வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஜீவனோபாயம், முரண்பாடு, சமாதானம், அமைதி மற்றும் சுனாமி மீதான விடயங்கள் கலந்துரையாடலில் உட்படுத்தப்பட்டிருந்தன.