Category: news

Judge advised police on Wariyapola incident

குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம், திலினி அமல்கா தன்னிச்சையாக தாக்கியமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாரியபொல வீதியில் திலினியை தொந்தரவு செய்து, அடிவாங்கிய செல்வா என அழைக்கப்படும் சந்திர குமாரவின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தாக்குதலுக்கு இலக்காகியமையால் கேட்கும் திறன் இழந்துவிட்டதாக கூறி செல்வாவினால், திலினி மீது குற்றவியல் கோவையின் பிரிவு 314இன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. செப்ரம்பர் 2ஆம் திகதி, இன்றைய விசாரணையின் போது, ஆரம்ப உத்தரவுகளை பின்பற்றாமை … Continue reading Judge advised police on Wariyapola incident

Every step counts

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரான வன்முறையை எதிர்கொள்ளும் நோக்கில் வுமன் இன் நீட் நிறுவனத்தின் ஆதரவுடன் “வோக்ட் ஃபோ வின்” என்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு இணைந்தது. நடிகர்கள், இசைக் கலைஞர்கள், இளம் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆகஸ்ட் 30இல் 500இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றினர். ஒற்றுமையின் பிரதிபலிப்பாக நிகழ்வின் இறுதியில் அவர்களுக்கு கருப்புபோல்கா உருவங்கள் அடங்கிய இளஞ்சிவப்பு சால்வை வழங்கப்பட்டது. சி.எச் அன்ட் எப்.சி மைதானத்தில் இருந்து, நெளும் பொக்குன (தாமரைத் தடாகம்) ஊடாக விஜேராம மாவத்தையினால் … Continue reading Every step counts

WMC condemns the societal indictments of Thilini Amalka

வாரியபொலவைச் சேர்ந்த 21 வயதான திலினி அமல்கா எனப்படும் பெண்ணின் மீதான சமூகம்சார் குற்றச்சாட்டுக்களை பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு கண்டிக்கின்றது. வாரியபொல பஸ் நிலையத்தில் ஆண் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் திலினி, ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். திலினியால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு முறையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பொலிஸார், அவரை உளவியல் பரிசோதனைக்கு உள்ளாகுமாறு கோரப்பட்டார். இரண்டாம் நிலை பாதிப்புக்கு திலினி உள்ளானார். ஆரம்ப களங்கப்படுத்தல் நிலைமையை … Continue reading WMC condemns the societal indictments of Thilini Amalka

Civil Society plan to review 20 years of Beijing Platform for Action

பெண்ணிய மற்றும் பெண்கள் உரிமைகள் வலையமைப்புக்களின், அங்கங்களின், கூட்டமைப்புக்களின் பரந்த கூட்டணியானது, ஆசிய மற்றும் பசுபிக்கிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (UN ESCAP) நடவடிக்கைக்கான பெய்ஜிங் பிரகடனம் மற்றும் தளத்திற்கான பிராந்திய மற்றும் உலகளாவிய மீளாய்வுக்கு தயாராகி வருகின்றன. பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதாரம் உள்ளடங்கலாக பெண்களின் மனித உரிமைகள் தொடர்பான விசேட நிபுணத்துவத்தினைக் கொண்டு தயார்ப்படுத்தலுக்கு உதவும் வகையில், பிராந்திய வலையமைப்புக்கள், சுதேச, புலம்பெயர், மாற்றுத்திறனுடைய பெண்கள், இளைஞர்கள், LBT பெண்கள், … Continue reading Civil Society plan to review 20 years of Beijing Platform for Action

Migrant SHADOW report consultation

முதலாவது புலம்பெயர்தல் நிழல் அறிக்கை கலந்தாய்வு கூட்டமானது, 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பில் நடைபெற்றது. கம்பஹா, கண்டி, றம்புக்கனை, குருநாகல் மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் குழுவானது, வெளிநாட்டில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் சிறந்த புரிந்துணர்வை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

Trade union women meet

நாட்டின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் ஒன்றுகூடி, 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31ஆம் திகதி தொழிற்சங்கப் பெண்களின் எதிர்காலத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தும் பிரதான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடின. தொழிற்சங்கப் பெண்களை பிரதிநிதித்துவம் செய்யும் முப்பத்தியெட்டு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பிடமும், அதன் வலையமைப்புடனும் பகிர்ந்து கொண்டனர். வலையமைப்பாதல் மற்றும் அணி திரளல் தொடர்பில் பெண்களுக்கு கற்பிப்பதற்கு சட்டத்தரணி ஷாமிளா தளுவத்தையும் இந்த நிகழ்வுக்கு … Continue reading Trade union women meet