Category: State & Politics

Peace Advocacy Radio Spots

மே 11- 14 வரையான வெசாக் வாரத்திலே WMC ஆனது 10 செக்கன் நீளமான வானொலி குறு விளம்பரங்களை தொடர்ச்சியாக சமாதானப் பரிந்துரையை பலப்படுத்த ஒலிபரப்புவதற்கு வானொலி ஊடகத்தைப் பயன்படுத்தியிருந்தது. இது சிங்கள Sha FM மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11 – 14 ஆம் திகதி வரை ஒலிபரப்பப்பட்டது. வன்முறைகளையும் கொலைகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு இச்செய்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இக் குறு விளம்பரத்தின் ஒலிவடிவத்தைக் கேட்க இங்கே … Continue reading Peace Advocacy Radio Spots

Media Release – “Defend Women’s Right to Work”

வடக்கு கிழக்கிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களில் பெண்கள் வேலை செய்வதில் ஏற்படுத்தப்பட்ட தடைக்கு பதிற்செயற்பாடாக 2006 ஏப்ரல் 26 ஆம் திகதி WMC ஆனது 65 பெண்களின் கைச்சாத்துடன் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது. இவ் கைச்சாத்துடன் கூடிய அதே அறிக்கையானது ஜனாதிபதிக்கும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கும், வடக்கு கிழக்கு விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

Vesak Banner Campaign

சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரி 2006 மே வெசாக் மாதத்தில் ஒரு பதாதை பிரச்சாரத்தை மேற்கொண்டனர். எல்லா சுலோகங்களும் புத்தசமயம் தொடர்பானதாக இருந்ததுடன் 36 பதாதைகள் சிங்களத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவ் பதாதைகளானவை பந்தல்கள் (வெசாக்கிற்கு பயன்படுத்தப்படும் ஒளியூட்டிய கட்டமைப்புக்கள்) பிரபல்யமான கோயில்கள் மற்றும் கொழும்பு அநுராதபுரம், கட்டுநாயக்க, பொலநறுவை மற்றும் காலியிலுள்ள பெரிய சுற்றுவட்டங்கள் என்பவற்றில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Radio Spot Advertisements to commemorate 4th Year of CFA

சிங்களம், ஆங்கிலம், தமிழிலுமான 15 நிமிட நேர குறு வானொலி விளம்பரங்கள் 12 சிரச எப்எம், Yes FM, Y-FM சக்தி எப்எம் என்பவற்றில் 2006 ஆம் ஆண்டு பெப்ருவரி 22 ஆம் திகதி ஒலிபரப்பப்பட்டது. இவ் விளம்பரங்களின் ஊடாக பின்வரும் செய்தியானது ஒலிபரப்பப்பட்டது.   “யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு வயது நான்கு. இனி யுத்தமில்லை யுத்த நிறுத்தத்தை பலப்படுத்துங்கள். சமாதானம் யுத்தமல்ல வாழ்க்கை இறப்பு அல்ல. இது பெண்கள் ஊடகக் கூட்டமைப்பினால் இலங்கைப் பெண்களின் வேண்டுகோளாகும்.”

Animated TV Advertisements

புரிந்துணர்வு ஒப்பந்தமானது பாதுகாக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து 2006 ஆம் ஆண்டு பெப்ருவரி 22, மற்றும் 23 ஆம் திகதிகளில் மூன்று மொழிகளிலும் 30 வினாடி தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இவ்விளம்பரங்களாவன சக்தி ரிவி, சிரச ரிவி, எம் ரிவி, சுவர்ணவாஹினி ஆகியவற்றின் மூலம் ஒளிபரப்பப்பட்டன.

Peace Vigil to coincide with Norwegian Facilitator’s visit to Jaffna

2006 ஜனவரி 23 ஆம் திகதி சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் அமைப்பானது நோர்வேஜிய மத்தியஸ்தர் எரிக் சொல்ஹைம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நேரத்தில் வவுனியாப் நகரில் தமது இரண்டாவது சமாதானப் பவனியை நடத்தினர். ஆனாலும் ஜனவரி 21 ஆம் திகதி சனிக்கிழமை அடம்பனில் நடைபெற்ற தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட பாதுகாப்புக்காரணங்களின் நிமித்தம் அவர்கள் தமது சமாதானப்பவனியை லிப்டன் சுற்றுவட்டாரத்தில் நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். 300க்கு மேற்பட்ட பெண்கள் குருநாகலை, புத்தளம், கண்டி, பொலநறுவை, அனுராதபுரம் போன்ற வேறுபட்ட … Continue reading Peace Vigil to coincide with Norwegian Facilitator’s visit to Jaffna

Peace Campaign – “Life not Death; Peace Not War”

2005 டிசம்பரில் சமாதானத்திற்கும் ஜனநாயத்திற்குமான இலங்கைப் பெண்கள் (SLWPD), எனும் பெண்கள் அமைப்பின் குழுவொன்று WMC வின் உதவியுடன் “வாழ்க்கை இறப்பு அல்ல; சமாதானம் யுத்தமல்ல” என்ற கருப்பொருளில் ஒரு சமாதானப் பிரச்சாரத்தை இலங்கை அரசாங்கமும் எல்ரிரிஈயும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் வன்முறைகள் ஆரம்பிப்பதற்கும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பாதிப்பும் முடிவுக்கும் கொண்டுவர வேண்டுமென பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஒவ்வொரு மாதமும் இச்சமாதானப் பிரச்சாரம் தொடர்ந்ததால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கொழும்பு லிப்ரன் (லிப்டன்) சுற்று … Continue reading Peace Campaign – “Life not Death; Peace Not War”

Head of Household Meeting

WMC ஆனது 2005 ஜுலை 25 ஆம் திகதி CENWOR கலையரங்கிலே குடும்பத்தலைவர்கள் கருத்துநிலையை மீளப்பரிசோதிப்பது மீதான ஒரு பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்திருந்தது. அது சம்பந்தமான துறை சார்ந்தோரினால் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. உரிமைகளை அடிப்படையாக வைத்து, குடும்பத்தலைவர்கள் குறித்த கருத்துநிலையை மீளப்பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு வேலையாக இது அமைந்தது. காணியுரிமைகளும் குடும்பத்தலைவரும், குடிசனமதிப்பீடும் குடும்பத்தலைவர் என்ற கருத்துநிலையும், சுனாமிக்குப்பின் அதிலிருந்து மீழல், நிவாரணம் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் குடும்பத்தலைவர் என்ற கருத்துநிலையும் நடைமுறையும் எப்படி இருந்தது … Continue reading Head of Household Meeting