Category: State & Politics

DAWN – Regional Training Institute

இளம் பெண்ணிலைவாதிகளுக்கான இரண்டாவது பயிற்சி நிறுவகமானது தென் மற்றும் தென்கிழக்காசியாவுக்கான, புதிய யுகத்திற்கான  பெண்களின் மாற்று அபிவிருத்தியினால் ; (DAWN),  பிலிப்பைன்ஸ் மனிலாவில் 2009 ஏப்ரல் 16 – 22ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் ஊடகக் கூட்டமைப்பைச் சேர்ந்த குமுதினி சாமுவேல் மற்றும் நிலுஷா ஹேமசிறி இதில் பங்குபற்றியிருந்தனர். குமுதினி சாமுவேல் (DAWN),  தென்னாசிய ஒருங்கிணைப்பாளர் பயிற்சியிலே வளவாளராகப் பங்குபற்றியிருந்தார். இப்பயிற்சியானது ஆசிய கண்டத்திலிருந்தான இளம் பெண் பங்குபற்றுனர்களுக்கு எமது உள்ளுர் மற்றும் பிராந்திய … Continue reading DAWN – Regional Training Institute

Inter-generational Meeting

இளைய, மற்றும் முதிர்ந்த செயற்பாட்டாளர்கள்/பெண்ணிலை வாதிகளுக்கான ஒரு தலைவர்களுக்கிடையிலான கூட்டமானது WMC வில் 2009 மார்ச் 23 ஆம் திகதி அன்று நடைபெற்றது. இவ் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் இலக்கானது, இளைய மற்றும் முதிர்ந்த பெண்களிடையே அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதையும் முரண்பாடு, வன்முறை மற்றும் குற்றம் தண்டிக்கப்படாமை போன்ற பொதுவான அக்கறைகளுடன் ஈடுபடுவதற்கான சாதகமான தந்திரோபாயங்களை கலந்துரையாடுவதற்காகவும் இது ஒழுங்கு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடலானது முறைசாராததாகவும், இளைய, முதிர்ந்த பங்குபற்றுனர்களுடன் ஊடாடுவதாகவும் முரண்பாட்டின் தம் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் மிகவும் சாதகமான … Continue reading Inter-generational Meeting

Progress of CEDAW Shadow Report and Status of Women Report 2008 – 2009

2008 ஒக்ரோபர் 17 ஆம் திகதி ஒரு எழுத்தாளர்களின் கூட்டமானது WMC இல் இடம்பெற்று அங்கே சீடோ நிழல் அறிக்கை மற்றும் SWR எழுத்தாளர்கள் இரு அறிக்கைகளையும் எழுதுவது  குறித்துக் கலந்துரையாட ஒன்று கூடினர். ஒரு கவனயீர்ப்புக் குழுக் கலந்துரையாடலானது 2009 பெப்ருவரி 27 ஆம் திகதி WMC இல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தான 09 கிராமிய பெண்கள் சனசமூகத் தலைவர்களின் பங்குபற்றுகையுடன் இடம்பெற்றது. சிறுவர் அபிவருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் செயலாளரிடமிருந்தான அழைப்பினைத் தொடர்ந்து பெண்கள் … Continue reading Progress of CEDAW Shadow Report and Status of Women Report 2008 – 2009

GEAR Meeting

ஐநா முறைமையும் Gender Architecture Reform (GEAR) யின் ஒரு விளக்கக் கூட்டமானது 2009 பெப்ருவரி 26 ஆம் திகதி WMC இல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் நோக்கமானது GEAR பிரச்சாரம் மீதான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதும், நியூயோர்க்கில் நடைபெறும் பெண்களின் நிலை மீதான அமர்வில் இலங்கையின் நிலையை ஆணைக்குழுவிற்கு கொண்டு செல்வதுமாகும்.

National Convention 2009

WMC ஆனது 2009 பெப்ருவரி 6 – ஆம் திகதி வரையில் அதனது பங்காளர் பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து கண்டி திலங்கா ஹோட்டலில் ஒரு தேசிய சமவாயத்தை ஒழுங்கு செய்திருந்தது. நாட்டின் எல்லாப் பாகங்களில் இருந்து பல்வேறுபட்ட பெண்கள் நிறுவனங்களில் இருந்தும் மொத்தமாக 41 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். இக்கூட்டமானது கலந்துரையாடல், எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளல், என எல்லாப் பங்குபற்றுனர்களும் பல கவனத்திற்குரிய பிரச்சினைகளை கலந்துரையாடும் கூட்டமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

செப்ரெம்பர், டிசம்பர் 2008 – 

இக்காலப்பகுதியிலே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தான கருத்திட்ட சுருக்க இறுதி அறிக்கைகள் மாகாண ஆணையாளருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கைகளானவை குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சபைகளின் ஒருவருட கால அவதானிப்புக்களின் காண்புகளைக் கொண்டிருந்தன. 2008 நவம்பரில் அவதானிப்பாளர்கள் 2010 மாகாண சபைகள் தேர்தலுக்கான பெண் பிரதிநிதிகளுக்காக ஒரு மாவட்ட அடிப்படையிலான செயற்திட்டத்தினை அமைத்திருந்தார்கள்.

International Human Rights Day 2008

WMC ஆனது ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மனித உரிமைகள் தினத்தின் நினைவாக 2008 இல் லிப்ரன் சுற்றுவட்டத்தில் ஒரு பேரணியில் பங்குபற்றியிருந்தது. பேரணியைத் தொடர்ந்து பொது நூலகத்திலே ஒரு கூட்டம் இடம்பெற்றது. WMC ஆனது ஏனைய பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து பிரபலமானவரும் மனித உரிமைகள் ரீதியாக மதிக்கப்படும்  சட்டத்தரணியுமான திரு.  J.C வெலியமுன அவர்களின் வதிவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரனைற் தாக்குதல் தொடர்பாக  03.10.2008 அன்று ஒரு கண்டனக் கடிதத்தை வெளியிட்டது. 
 
கடிதத்தைப் பார்க்க இங்கே … Continue reading International Human Rights Day 2008

FLICT Partner Day

WMC ஆனது ஒக்ரோபரில் பேருவளையிலும், நவம்பரில் கண்டியிலும் நடைபெற்ற FLICT பங்காளர் தினத்தில் பிரதிநிதித்துவம் செய்திருந்தது. பங்குபற்றுனர்கள் தமது அனுபவங்களை ஏனைய பங்காளர் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால செயற்திட்டங்களையும் உருவாக்கியிருந்தனர்.