Category: Video

International Peace Day 2008

WMC ஆனது 2008 செப்ரெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி பல தொலைக்காட்சி நிலையங்களும், வானொலி நிலையங்களும் ஒளி/ஒலி பரப்பிய சமாதான கீதத்தை ஒளி/ஒலிபரப்பும் இசைநிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியது. பின்வரும் அலைவரிசைகள் தெரண தொலைக்காட்சி – சமாதான தின இசை நிகழ்ச்சி சுவர்ணவாஹினி – Hada Randi Paya சிங்கள வர்த்தக சேவை – FM 93.3, 106.9, 96.9 தென்றல்  FM – FM 104.8, 105.6, 107.9 ஆங்கல வர்த்தக சேவை  – … Continue reading International Peace Day 2008

Radio Spot Advertisements

WMC ஆனது அமைதி தொடர்பான ஆய்வுப்பொருட்களை ஊக்கப்படுத்தி 6 மாதக் காலப்பகுதிக்கான 30 செக்கன் குறுவிளம்பரங்களை தொடர்ச்சியாக ஒலிபரப்புச் செய்தது. இவ் விளம்பரங்களானவை நாளாந்தம் சிங்கள தேசிய சேவையில் (98.3 FM) இல் காலை 6.00 மணிச் செய்தி மற்றும் சிங்கள வர்த்தக சேவை (93.3 FM) காலை 6.30 மணிச் செய்திக்கு முன்பாக ஒலிபரப்புச் செய்யப்பட்டன.

We Women campaign

ஜனவரி
 
- WMC ஆனது  ஜனவரி மாதத்து “நாங்கள் பெண்கள்” கூட்டமைப்பின் ஒரு பாகமாக இருந்தது. நாங்கள் பெண்கள் என்பது 2008 ஆம் ஆண்டளவில் இலங்கை சுதந்திரத்தின் 60 ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடிய நிகழ்வில் ஒன்றாகக் கூடிய தனிப்பட்ட பெண்கள் மற்றும் பெண்கள் குழுக்களின் ஒரு கூட்டிணைவாகும். இக் கூட்டிணைவை உருவாக்குவதன் நோக்கம் என்னவெனில் இலங்கையிலே சிவில் யுத்தம் பொருளாதார தாராண்மை மயப்படுத்தலும் உலகமயமாக்கலும் பெண்களுக்கான கணிசமான சமத்துவத்தை ஈட்டிக்கொள்வதில் எழுந்துவரும் சவால்கள், எதிர்காலத்திற்கான உபாயங்களை மீளச் … Continue reading We Women campaign

Radio Clips on Women’s Issues

WMC ஆனது “Kadathurawen Eha” (வெள்ளித் திரைக்கு அப்பால்) என அழைக்கப்படும் பெண்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இரு நிமிட வானொலி ஒலிபரப்புகளை உருவாக்கியது. இவ் ஒலித்துண்டங்களானவை சிங்கள வர்த்தகசேவை வானொலி நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டன. இவற்றினூடக  வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள்  பெண்களின் உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு,  சர்வதேச பெண்கள் தினம், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் தோட்டத்துறைப் பணியாளர்கள், அரசியலில் பெண்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊடகம் போன்றன.

Radio Drama on the Peace Process

“வெள்ளித் திரைக்கு அப்பால்” எனும் எட்டு அங்க வானொலி நாடகமானது சிங்களத்தில் உருவாக்கி தயாரிக்கப்பட்டு சிங்கள வர்த்தக சேவையில் ஒலிபரப்பப்பட்டது.சமாதானச் செயன்முறையின் தாக்கம் தனிநபர்கள், சமூகங்கள் மீது எவ்வாறு இருந்தன என்பதைபற்ரியதாகும். குறிப்பாக எவ்வாறு சமாதானமானது மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது என்பதையும், யுத்தத்தின் பின்விளைவுகளையும் கலந்துரையாடியது. இதன் பிரதியானது ககத்தலின் ஜெயவர்த்தன (Kathline Jayawardena) அவர்களால் எழுதப்பட்டதுடன் மஹிந்த அல்கம (Mahinda Algama) வினால் தயாரிக்கப்பட்டது.

Vesak Week Radio Spot Advertisements

மே 11- 14 வரையான வெசாக் வாரத்திலே WMC ஆனது 10 செக்கன் நீளமான வானொலி குறு விளம்பரங்களை தொடர்ச்சியாக சமாதானப் பரிந்துரையை பலப்படுத்த ஒலிபரப்புவதற்கு வானொலி ஊடகத்தைப் பயன்படுத்தியிருந்தது. இது சிங்கள Sha FM மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11 – 14 ஆம் திகதி வரை ஒலிபரப்பப்பட்டது. வன்முறைகளையும் கொலைகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு இச்செய்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இக் குறு விளம்பரத்தின் ஒலிவடிவத்தைக் கேட்க இங்கே … Continue reading Vesak Week Radio Spot Advertisements

Peace Advocacy Radio Spots

மே 11- 14 வரையான வெசாக் வாரத்திலே WMC ஆனது 10 செக்கன் நீளமான வானொலி குறு விளம்பரங்களை தொடர்ச்சியாக சமாதானப் பரிந்துரையை பலப்படுத்த ஒலிபரப்புவதற்கு வானொலி ஊடகத்தைப் பயன்படுத்தியிருந்தது. இது சிங்கள Sha FM மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11 – 14 ஆம் திகதி வரை ஒலிபரப்பப்பட்டது. வன்முறைகளையும் கொலைகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு இச்செய்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இக் குறு விளம்பரத்தின் ஒலிவடிவத்தைக் கேட்க இங்கே … Continue reading Peace Advocacy Radio Spots

“Rala Matha Andi Roo” TV Programme

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சிங்கள மற்றும் தமிழ் தொலைக்காட்சி நிகழச்சிகள் ஜ் அலைவரிசை மற்ரும் ரி.என்.எல் இல் 2007, 5 ஜுலையில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. பெண்கள் தீர்மானம் எடுப்பதில் பங்குபற்றுதல், காணியுரிமை, வீட்டு வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஜீவனோபாயம், முரண்பாடு, சமாதானம், அமைதி மற்றும் சுனாமி மீதான விடயங்கள் கலந்துரையாடலில் உட்படுத்தப்பட்டிருந்தன.

Radio Talk Shows on Tsunami Affected Women

WMC ஆனது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சிங்கள சேவையில் ஒரு தொடர்ச்சியான உரைக்காட்சியை 2005 ஒலிபரப்பியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் இக்காட்சிகளில் கலந்துரையாடப்பட்டன.