Consultative Forum on Increasing Women’s Political Participation at the local level in Sri Lanka

ஜுலை 2009
 – 
உள்ளுர் மட்டத் தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுகையை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. விழுது, பெண்கள் அபிவிருத்தி நிலையம் யாழ்ப்பாணம் என்பவற்றுடன் கூட்டுழைப்புடன் WMC யினாலும், UNDP யின் அனுசரணையுடனும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாண மாநகரசபை தேர்தலில் பங்குபற்றும் பெண் செயற்பாட்டாளர்கள் உட்பட 50 பெண்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.  இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் சில சவால்கள், உள்ளுராட்சியில் போட்டியிடுதல், ஆட்சி, ஜனநாயகமும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும், உள்ளுராட்சி அமைப்புக்களைக் கண்காணித்தல், பெண்களின் அரசியல் பங்குபற்றுகையை ஊக்குவிக்க ஊடகத்தைப் பயன்படுத்துதல், உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக அனுபவங்கள் பகிரப்பட்டு கலந்துரையாடப்பட்டது. பங்குபற்றுனர்களால் உரிய சிபார்சுகள் தொகுக்கப்பட்டன. கூட்டமானது பங்குபற்றுனர்களால் ஊடகங்களுக்கு தமது  சிபார்சுகள் வழங்கப்பட்ட ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டுடன் முடிவுக்கு வந்தது.