உள்ளீடுகளுக்கு அழைப்பு: குறுந்திரைப்படப் போட்டி 2023

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு
குறுந்திரைப்படப் போட்டி 2023

ஊதியமற்ற பராமரிப்புப் பணியும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பும்.

ஊதியமற்ற பராமரிப்புப் பணியின் பெறுமானத்தை முன்னுரிமைப்படுத்திக் காண்பிக்கும் ஆக்கபூர்வமான குறுந்திரைப்படத்துக்கான பிரதியாக்கங்களை நாம் எதிர்பார்க்கின்றோம். குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காக பெரும்பாலும் பெண்களினாலும் மற்றும் சில ஆண்களினாலும் வீட்டில் செய்யப்படும் பணிகளே ஊதியமற்ற பராமரிப்புப் பணி என்பதனுள் அடங்குகின்றன. இப்பணி குடும்பம் சார்ந்த கடமைகள் மற்றும் அன்புணர்வு ஆகியன பற்றிய சமூக எதிர்பார்ப்புக்களுடன் பின்னிப்பிணைந்துள்ளதுடன், அது எவ்வித ஊதியமுமின்றி நிறைவேற்றப்படுகின்றது. அதாவது அப்பணிக்கு ஊதியம் கொடுக்கப்படுவதுமில்லை, பெரும்பாலும் குடும்பத்திலுள்ள பராமரிப்பாளர்களினால் அத்தகைய ஊதியம் எதிர்பார்க்கப்படுவதுமில்லை.

துரிதமாக அதிகரித்துவரும் முதியோர் சனத்தொகையையும், கணிசமான எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகளையும் இலங்கை கொண்டுள்ளதனால், முதியோர்களாக அத்துடன்/அல்லது மாற்றுத்திறனாளிகளாக உள்ள அத்தகைய குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்புக் குறித்து கவனம் செலுத்துகின்ற குறுந்திரைப்படப் போட்டியொன்றை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

குறுந்திரைப்படப் போட்டிக்காக (4 நிமிடங்கள் அல்லது அதற்குக் குறைவான நேரத்தைக் கொண்ட) பிரதியாக்கங்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் ஏதாவதொன்றில் 2022, 7 அக்டோபர் ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் எமக்கு அனுப்பி வையுங்கள்.

இப்போட்டி இலங்கையர்களுக்கு மாத்திரமானதாகும்.

இப்போட்டி முடிவுகள் இரண்டு கட்டங்களில் தீர்மானிக்கப்படவுள்ளன. முதலாவது கட்டத்தில், கிடைக்கப்பெற்ற பிரதியாக்கங்கள் மீதான முடிவும் மற்றும் இரண்டாவது கட்டத்தில், பூர்த்திசெய்து சமர்ப்பிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் மீதான முடிவும் தீர்மானிக்கப்படும்.

போட்டிக்காகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதியாக்கங்களை எழுதியவர்களுக்கு இலங்கையின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரினால் பிரதியாக்கம் எழுதுதல் மற்றும் குறுந்திரைப்படத் தயாரிப்பு ஆகியன பற்றிய இலவச பயிற்சியொன்று வழங்கப்படும்.

மிகச்சிறந்த பிரதியாக்கங்களுக்கான பரிசுகள்:
முதலாம் பரிசு – ரூபா. 50,000.00
இரண்டாம் பரிசு – ரூபா. 40,000.00
மூன்றாம் பரிசு – ரூபா. 30,000.00

முதல் மூன்று இடங்களைப் பெறும் குறுந்திரைப்படங்களுக்கான பரிசுகள்:
முதலாம் பரிசு – ரூபா. 100,000.00
இரண்டாம் பரிசு – ரூபா. 75,000.00
மூன்றாம் பரிசு – ரூபா. 50,000.00

உங்கள் பிரதியாக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கு அல்லது மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு தயவுசெய்து wmcsrilanka@womenandmedia.org எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு: இல. 56/1, சரசவி ஒழுங்கை, கார்ஸல் வீதி, கொழும்பு 08