Category: Activities Media

Radio Spot Advertisements

WMC ஆனது அமைதி தொடர்பான ஆய்வுப்பொருட்களை ஊக்கப்படுத்தி 6 மாதக் காலப்பகுதிக்கான 30 செக்கன் குறுவிளம்பரங்களை தொடர்ச்சியாக ஒலிபரப்புச் செய்தது. இவ் விளம்பரங்களானவை நாளாந்தம் சிங்கள தேசிய சேவையில் (98.3 FM) இல் காலை 6.00 மணிச் செய்தி மற்றும் சிங்கள வர்த்தக சேவை (93.3 FM) காலை 6.30 மணிச் செய்திக்கு முன்பாக ஒலிபரப்புச் செய்யப்பட்டன.

TV Campaign on Women’s Political Participation

‘நாங்கள் பெண்கள்’என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அரசியல் நிறுவனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக ஒரு தொலைக்காட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டது, அது WMC ஆனது சமாதானத்தைப் பாதுகாக்கும் பெண்களின் அமைப்பின் ஆதரவுடன் இணைந்து செய்தது. இரண்டு தொலைக்காட்சி விளம்பரங்கள் 2008 ஆகஸ்டில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டதுடன், அவை தெரண, சிரச தொலைக்காட்சிகளிலும் தமிழ் விளம்பரங்களானவை சக்தி ரிவியிலும் ஒலிபரப்பப்பட்டது. விளம்பரங்களானவை ஜனவரி மத்தியில் இருந்து பெப்ருவரி வரை ஒலிபரப்பப்பட்டது.

People’s SAARC

தென்னாசிய மக்கள் ஒன்று கூடுகை  People’s Assembly (People’s SAARC 2008) ஆனது ஜுலை 18, 19, 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்றது. 1993 இலிருந்து பிராந்திய ஒத்துழைப்பிற்கான தென்னாசிய சங்கத்தின் அரச தலைவர்களுடைய கூட்டத்திற்கு சமாந்தரமாக, தென்னாசியா பூராகவுமான, ஒழுங்கானதும் தொடர்ந்து நடைபெறுவதுமான கூட்டுழைப்புக் கலந்துரையாடல் தந்திரோபாயப்படுத்தல், மற்றும் செயற்பாட்டுச் செயன்முறையானது 1993 இலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. WMC ஆனது மக்கள் பேரணியை ஒருங்கிணைப்புச் செய்ததுடன், இக்கூட்டத்தின் இறுதி நாளிலே … Continue reading People’s SAARC

Forum Theatre

மேடை அரங்காற்ருவோர் குழுவானது WMC வினை அணுகி அவர்களின் அடுத்த  அரங்கத் தயாரிப்புக்காக நிதி ஆதரவு கேட்டிருந்தனர். அது 2008 மார்ச் 08 – 12 ஆம் திகதி வரை நிகழ்வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. ஆற்றுகைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த தலைப்புக்களாக, குடும்ப வன்முறை மற்றும் இன முரண்பாடு என்பன அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பின் நோக்கமானது வேறுபட்ட நோக்கங்கள் உள்ள ஆட்களை கருத்துக்களைப் பரிமாறுவதற்கு தூண்டுவதும், ஒரு பொதுவான பிரச்சினையை வேறுபட்ட கருத்துடையவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை பார்க்கத் … Continue reading Forum Theatre

YA TV – Point of View

YATV ஆனது WMC மற்றும் “சர்வதேச பெண்கள் பிரச்சாரம்” என்பவற்றின் கூட்டுழைப்புடன் புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி உரைக்காட்சித் தொடரினை 2008 செப்ரெம்பரில் இருந்து அறிமுகம் செய்தது. இத் தொடரானது பெண்களின் சமூகம் மட்டிலான அனுபவங்களையும் சமூகத்திற்கான பங்களிப்புகளையும் முக்கியப்படுத்தியிருந்தது.

Radio Clips on Women’s Issues

WMC ஆனது “Kadathurawen Eha” (வெள்ளித் திரைக்கு அப்பால்) என அழைக்கப்படும் பெண்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இரு நிமிட வானொலி ஒலிபரப்புகளை உருவாக்கியது. இவ் ஒலித்துண்டங்களானவை சிங்கள வர்த்தகசேவை வானொலி நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டன. இவற்றினூடக  வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள்  பெண்களின் உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு,  சர்வதேச பெண்கள் தினம், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் தோட்டத்துறைப் பணியாளர்கள், அரசியலில் பெண்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊடகம் போன்றன.

Billboards on the Prevention of Domestic Violence Act

ஜனவரி 2007, ஆகஸ்ட் 2007
  –  WMCஆனது இலங்கை ஒக்ஸ்பாம்  மற்றும் ‘எம்மால் முடியும்’ பிரச்சாரத்தி உதவியுடனும் நாடு பூராகவும் 8 இடங்களில் விளம்பரப்பலகைகளைக் காட்சிப்படுத்தியது. (வடக்கைத் தவிர) விளம்பரப் பலகைகளை 2007 மேயில் இருந்து மூன்று மாதங்களுக்கு காட்சிப்படுத்தியது. சிங்கள மொழி விளம்பரப் பலகைகள் கண்டி, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், வெலிசறவிலும், தமிழ்மொழி விளம்பரப்பலகைகள் திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, ஹட்டனிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
சிங்கள மற்றும் தமிழ் விளம்பரப் பலகைகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

WMC Film Festival 2007

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் முகமாக ஒரு பெண்ணிய திரைப்பட விழாவானது ரஷ்ய காலாச்சார நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அங்கே தீபா மேதாவால் நெறிப்படுத்தப்பட்ட ஏத் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கலண்டர் கேள்(Calendar Girls) மற்றும் மாக்கறெதவொண்ரொற்ற (Margarethe Vontrotta) ஆல் நெறிப்படுத்தப்பட்ட ரோசன்ரா (Rosentrasse) போன்ற படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு படமும் திரையிடப்பட்ட பின்பு படம் குறித்த கலந்துரையாடலானது பேராசிரியர் நெலுபர் டி மெல் … Continue reading WMC Film Festival 2007

International Women’s Day 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த … Continue reading International Women’s Day 2007