“சலிப்பற்ற தாரகை” Podcast – Unpaid Care Work Podcast

அண்மையில், அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர், ஆய்வாளர் மற்றும் விரிவுரையாளரான டாக்டர் சரித்த திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் Podcast எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த பயிற்சிப்பட்டறை ஒன்று நடத்தப்பட்டது. இப் பயிற்சியில் பங்கேற்பாளர்களால் தயாரிக்கப்பட்ட சில Podcastகளை ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை என்ற தலைப்பில் மகிழ்ச்சியுடன் இவ்வாறு வெளியிடுகிறோம். தனது நேரத்தை ஒதுக்கி இந்த Podcast ஐ உருவாக்கி, எங்களிடம் கிடைக்கப்பெறச் செய்த கிருஷாந்தினி ஜெயராமன் சகோதரிக்கு எங்கள் விசேட நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
கிருசாந்தனி ஜெயராமன் சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் (Institute of Social Development) நுவரெலியா மாவட்டத்துக்கான திட்ட உத்தியோகத்தர் ஆவார். இவர் 8 வருட காலமாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், மலையக மக்களின் உரிமைகளுக்காக பல்வேறுப்பட்ட தளங்களில் குரலெழுப்புவதுடன் அம்மக்களிடையில் மறுக்கப்பட்ட உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அம்மக்களை தேசிய நீரோட்டத்தில் சமமான பிரஜைகளாக நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சமூக செயற்பாட்டாளராவார்.
அவரது “சலிப்பற்ற தாரகை♥️” Podcast சேனலில் பதிவேற்றப்பட்ட ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான podcast கேளுங்கள்.