Training on script writing – Short Film Competition

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் 2020 ஆம் ஆண்டின் குறுந்திரைப்படப் போட்டிக்காக அனுப்பப்பட்ட திரைக்கதைப் பிரதிகளிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி உரிமையாளர்களுக்கு ‘திரைக்கதை ஆக்கமும் தயாரிப்பும்’ என்பது தொடர்பில் இரண்டு நாட்களைக்கொண்ட இலவசப் பயிற்சியொன்று வழங்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப்பட்டறையில் சிறந்த திரைப்பட இயக்குனரும் சினிமா தொடர்பான விரிவுரையாளருமான திரு. சுதத் மகதிவுல்வெவ அவர்களால் மேற்குறிப்பிடப்பட்ட தலைப்பின்கீழ் பிரதான வளவாளராக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் கலாநிதி சேப்பாலி கொட்டேகொட அவர்களால் “இலங்கைப் பெண்களின் சம்பளமில்லா வீட்டுவேலைகள்” எனும் விடய எண்ணக்கரு தொடர்பாக விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்பயிற்சிப்பட்டறையின் பின்னர் பங்குபற்றுனர்களால் சமர்ப்பிக்கப்படவுள்ள குறுந்திரைப்படங்கள் சுயாதீன நடுவர் குழுவொன்றினால் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. வெற்றிபெற்ற சிறந்த குறுந்திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான பரிசு வழங்கல் போன்றவற்றுடனான குறுந்திரைப்பட விழாவை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் எதிர்பாருங்கள்.