WMC TikTok “பராமரிப்புப் பணி பற்றி புதிதாக சிந்திப்போம்”

வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்கின்ற – வேலை அழுத்தத்தைக் குறைக்கின்ற புதியதொரு TikTok போட்டி

நீங்கள் தற்போது பல்வேறு விடயங்கள் பற்றி பல TikTok காணொளிகளைத் தயாரித்திருப்பீர்கள். அவ்வாறாயின் கொஞ்சம் புதிய முறையில் ஒன்றைத் தயாரித்து எமக்கு அனுப்ப முடியுமா?

நாளாந்தம் எமது வீடுகளில் பெண்கள் எந்தவொரு கொடுப்பனவோ ஊதியமோ இன்றி செய்கின்ற எல்லா ‘பராமரிப்பு வேலைகளும்’பற்றிய TikTok ஒன்றை தயாரித்து அனுப்புமாறு பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பாகிய நாம் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

வீட்டு வேலை, பிள்ளைகளின் வேலை, முதியோர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் பராமரித்தல் போன்ற வீட்டுக்கும் குடும்பத்திலுள்ளவர்களுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் மேற்கொள்ளும் வேலைகளையே பராமரிப்புப்பணி என்கின்றோம். அதுவும் எமது பெண்களால் ஊதியமொன்று பெறப்படாத வேலைகளாக இருப்பதால் ‘ஊதியமற்ற பராமரிப்புப் பணியாக’ அவற்றை நாம் அடையாளப்படுத்துகின்றோம். மறைக்கப்படுகின்ற இந்த உழைப்பானது எமக்கு விளங்காவிடினும், அந்தளவுக்கு உணரமுடியாதெனினும் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும் உயர்ந்த பங்களிப்பொன்றை வழங்குகின்றது. இதுபற்றி தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரக் கணக்கெடுப்புக்களிலும் இதுவரை உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்படவில்லை. இப்பணிகள் நாட்டின் தொழில் படைக்குள் உள்ளடக்கப்படவில்லை என்றாலும் உழைப்பின் பாரியதொரு வகிபாகத்தை பெண்கள் வகிக்கின்றனர் என்பதே யதார்த்தநிலைமை ஆகும். ஆனால் எம்மில் பலர் அதன் பெறுமதியை அதிகம் கணக்கெடுக்காது சிலவேளைகளில் குறைமதிப்பீட்டுக்கும் அதுவும் இல்லையெனில் அவமானத்துக்கும் உள்ளாக்குகின்றனர்.

அவ்வாறின்றேல் கேலிக்குட்படுத்துகின்றனர். அத்தகைய TikTok பலவற்றை நீங்களும் பார்த்திருப்பீர்கள். பராமரிப்புப் பணி செய்யும் விரல்விட்டு எண்ணக்கூடியளவிலான ஆண்களுக்கும் எமது சமூகம் மதிப்பளிப்பதில்லை. எமது கலாசாரத்துக்கு நல்லதல்ல, அதுவுமில்லை எனில் ஆண்பிள்ளைகளைக்கொண்டு வேலைகளை செய்விப்பது நல்லதல்ல, பாவம் கிட்டும் என்பது போன்ற பல்வேறு கற்பனைகளின் அடிப்படையிலான எண்ணங்களை இந்த சமூகத்துக்குக் கொண்டுசெல்வதும் எம்மவர்கள்தான்.

அதனால் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய எல்லாவற்றையும் மாற்றி பராமரிப்புப் பணிகளில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடனும் மதிப்புடனும் ஒற்றுமையாக வேலைகளைப் பகிர்ந்துகொண்டு மேற்கொள்ளும் சமூக முறை மாற்றமொன்று எமக்குத் தேவையாகும். அவ்வாறு மாற்றத்துக்குள்ளாக வேண்டிய இடங்கள் பற்றி ஏனையவர்கள் சிந்திக்க முடியுமானவாறு உணரக்கூடிய சிறந்த TikTok ஒன்றைத் தயாரித்து எமது @wmctikto இற்கு Tag செய்யுங்கள். அவற்றிடையே மிகச்சிறந்த TikTok தயாரிக்கும் 20 பேர்களுக்கு தலா ரூபா. 5000/- வீதம் பணப்பரிசில்களை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

போட்டி நிபந்தனைகள்
1. உங்கள் TikTok கணக்கிலிருந்து TikTok வீடியோ ஒன்றைத் தயாரிக்கவும். வயதெல்லை இல்லை. நீங்கள் விரும்புகின்றவாறு 15 விநாடிகளுக்கும் 30 விநாடிகளுக்குமிடையில் உங்கள் TikTok தயாரிப்பு இருக்க வேண்டும். ஏனையவர்களின் TikTok ஐ உங்கள் பெயரில் போட்டிக்கு அனுப்ப வேண்டாம். உள்ளடக்கமானது ஆக்கபூர்வமானதாக, யதார்த்தமானதாக, கற்பனைமிக்கதாக அல்லது தொகுக்கப்பட்டதாக இருந்தாலும் பரவாயில்லை.
2. எமது போட்டிக்கு உகந்த மட்டத்தில் இருத்தல் வேண்டும். அதாவது இன்னொருவர் மீது பாரியளவான குற்றச்சாட்டையோ அவமானப்படுத்தலையோ ஆபாசத்தையோ வன்முறையையோ தூண்டும் வகையிலான கருத்துக்கள் இருந்தால் @wmctikto அவற்றைப் போட்டிக்காக பொறுப்பேற்காது. ஒத்துணர்வுமிகுந்த, நகைச்சுவைமிகுந்த, பால்நிலை சமத்துவத்தை முன்னிலைப்படுத்துகின்ற அல்லது புதியதொரு வித்தியாசமான கருத்தைத் தருகின்ற ஒட்டுமொத்த சமூகத்தையும் அறிவுறுத்துகின்ற படைப்பாக இருத்தல் வேண்டும்.
3. உங்கள் TikTok படைப்பை உங்கள் கணக்கில் வெளியிடுங்கள். அதேபோல @wmctikto To இற்கு Tag செய்து அதன் Link ஐ எமக்கும் அனுப்புங்கள். உங்கள் விபரங்களுடன் கூடிய அந்த Link ஐ https://forms.gle/Wr5SYVTrQ2qKq1wXA எனும் Google form ஐ பூரணப்படுத்தி போட்டிக்குள் செல்லுங்கள்.
4. 2022 டிசம்பர் 30 ஆம் திகதியுடன் இந்தப் போட்டி நிறைவடைவதால், சிறந்ததெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட TikTok படைப்பாளர்களுக்கு தலா ரூபா. 5000/- வீதம் பணப்பரிசில்களை வழங்கவுள்ளோம்.
5. TikTok Community standards மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் Copy right விதிமுறைகளை நீங்கள் அறிந்திருப்பதால் அதற்கேற்ற வகையிலான தயாரிக்கப்பட்ட வீடியோவொன்றாக இருத்தல் வேண்டும்.
6. செய்தியை நன்றாகப் பரப்புவதற்கு நீங்கள் எங்களின் ஹாஷ் குறிச்சொல்லையும் பயன்படுத்தலாம்.
#වෙනසමුලින්මනිවසින්අරඹමු #மாற்றம்வீட்டிலிருந்தேஆரம்பம் #changestartswithyouartsathome #ගැහැණුන්ටත්අත්දෙකයි #பெண்களுக்கும்இரண்டுகைகளே #womenalsohaveonlytwohands #valueunpaidcarework #mencansharecare