Month: மார்ச் 2015

Increasing women’s political representation: a discussion on current reforms

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசப்படும் சமகாலப் பின்னணியில், பாராளுமன்றத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடும் பொருட்டு தேர்தல் முறைமை சீர்திருத்தங்களில் நிபுணத்துவம் பெற்ற கார் வொல்லனுடனான (Kare Vollan) ஆலோசனை அமர்வொன்று நேற்று இடம்பெற்றது. வெறும் முன்மொழிவுகளுக்கு அப்பால் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பை உறுதிப்படுத்துகின்ற வகையிலான சீர்திருத்தங்களை முதன்முறையாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இதன் பின்னணியில், இலங்கையின் உள்ளூர், மாகான மற்றும் … Continue reading Increasing women’s political representation: a discussion on current reforms

ACTFORM meets Minister of Foreign Employment, Thalatha Athukorala

புலம்பெயர் பெண் தொழிலாளர்களின் சமகால நிலைமைகள் பற்றியும் அவர்களின் நிலைமைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேலும் முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடும் பொருட்டு புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பு (ACTFORM) சந்தித்தது. ACTFORM வலையமைப்பினருக்கும் அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது சந்திப்பும் இதுவாகும். இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட சில முக்கியமான விடயங்கள் வருமாறு; • இருதரப்பு உடன்படிக்கை நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படுவதை முடிவுறுத்தல். • ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் … Continue reading ACTFORM meets Minister of Foreign Employment, Thalatha Athukorala

Film: Don’t think of me as a woman, an election story from the margins

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய முஸ்லிம் பெண்ணான ஐனூன் பீபி என்பவர் தேர்தலில் எதிர்கொண்ட போராட்டங்களை இது ஆவணப்படுத்துகின்றது. இத்திரைப்படம் ஐனூனின் அரசியல் அபிலாஷைகளை வெகுவாகப் பாராட்டும் அதேவேளை, அவரது சமூகம் மற்றும் அரசியல் கட்சி கட்டமைப்பு என்பவற்றுக்குள் இயல்பிலேயே வேரூன்றியுள்ள அதிகார மற்றும் ஆதிக்கப் பொறிமுறைகளை அவர் சவாலுக்கு உட்படுத்தும் வழிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றது. இன்று இலங்கையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 4,400இற்கு மேற்பட்ட உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகளிடையே … Continue reading Film: Don’t think of me as a woman, an election story from the margins

University students from New York and Colombo visit WMC

இலங்கையில் பெண்கள் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டு அடையாளப்படுத்துவதில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் வகிபாகத்தைப் பற்றியும், பால்நிலை சமத்துவத்தை அடைந்துகொள்வதில் அதன் பொருத்தப்பாடு பற்றியும் மேலதிக கற்றல்களை மேற்கொள்ளும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் கல்லடின் கலாசாலையிலும் (Gallatin School) மனித உரிமைச் சட்டத்தைக் கற்கும் மாணவர் குழாம் ஒன்று பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புக்கு விஜயம் செய்தது. அரசியலில் பெண்கள், தொழிற்சங்கங்களில் பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பெண்களும் ஊடகமும் என்பன … Continue reading University students from New York and Colombo visit WMC

WMC Women’s Photography Exhibition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட “பெண்களின் போராட்டங்கள் , பெண்களின் பெருமை” எனும் மகுடத்தின் கீழான கண்காட்சியுடன் இணைந்ததாக, 2014ஆம் ஆண்டுக்கான பெண்களின் புகைப்படக் கண்காட்சியும் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சி 2015 பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. “உழைக்கும் பெண்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் துறைசார்ந்த மற்றும் துறை சாராத சுமார் 30 … Continue reading WMC Women’s Photography Exhibition 2014

Prime Minister Wickramasinghe Pledges to Increase Women Participation in Politics

ஆதார மூலம் : Search for Common Ground பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழுவானது (Women Parliamentarian’s Caucus) பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் ஐ.நா பெண்கள் ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனதுரையில், சமகாலத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்ற தேர்தல் முறைமை மறுசீரமைப்பின் மூலம் உள்ளூர், … Continue reading Prime Minister Wickramasinghe Pledges to Increase Women Participation in Politics

WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் குறுந்திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்ற குறுந்திரைப்படங்களுக்கான விருதுகள் அவ்வமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப விழாவில் வழங்கப்பட்டன. “வேகவத் கெஹனிய” (வேகமான பெண்) என்ற குறுந்திரைப்படத்தைத் தயாரித்த ஜே.பி. குசும் ஜயவீர இவ்வாண்டுக்கான முதல் பரிசைத் தட்டிச்சென்றார். இவர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒரு தாதியாக கடமையாற்றுகின்றார் என்பதோடு இதுவே குறுந்திரைப்படத் தயாரிப்புக்கான அவரது கன்னி முயற்சியாக அமைந்தது. கொழும்பு கட்புல ஆற்றுகைக் … Continue reading WMC Short Film Competition 2014

IWD 2015: International Women’s Day March

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March

IWD 2015: Celebrating the life of our founder Sunila Abeysekara

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது தனது 30 ஆண்டுகால செயல்நிலையைக் கொண்டாடுகின்றபடியினால் அதன் நிறுவுனரான சுனிலா அபயசேகரவின் வாழ்வைக் கொண்டாடுவதற்கான ஒரு தருணத்தை நாம் எடுத்துக் கொள்கின்றோம். ஆதாரமூலம்:Isis International ஏன் சுனிலா மார்ச் 08ஆம் திகதியை நேசித்தாள்? சுனிலா புற்று நோயின் நான்காம் படிநிலைக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிற்பாடு அவருடன் சில பொழுதுகளைக் கழிப்பதற்காக 2003 மார்ச் 08ஆம் திகதி அளவில் நான் அவரிடம் சென்றிருந்தேன். பெண்கள் இயக்கங்கள் குறித்து எழுந்த … Continue reading IWD 2015: Celebrating the life of our founder Sunila Abeysekara