தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய பிராந்திய மாநாடு

இலங்கை சமூக விஞ்ஞானிகள் கழகத்தின் ஒத்துழைப்புடன் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு பதிவுசெய்துகொள்ளுமாறு ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊதியமற்ற பராமரிப்புப் பணி பற்றி ஆதரித்துவாதிடுவோருக்கு அழைப்புவிடுக்கின்றோம்

இப்போதே பதிவு செய்யுங்கள் – ஆன்லைன் பதிவு படிவத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்

2022, ஒக்டோபர் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில்

இலங்கையில் (ZOOM தொழில்நுட்பம் ஊடாகவும்) மு.ப. 9.00 முதல் பி.ப. 05.00 வரை

அடிப்படையில், ஊதியமற்ற பராமரிப்புப் பணி எனும் கருத்தேற்பு குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள குடும்பத்தவர்களின் நல்வாழ்வூக்காக வீட்டினுள் புரியப்படுகின்ற பணிகளை மையப்படுத்துகின்றது. ஊதியமற்ற வீட்டுப் பணி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பு என்பவற்றுடன், பல்வேறு வழிகளில் குடும்பத்துக்கு ஆதரவளிக்கும் சமூக வலையமைப்புக்களைப் பேணுதல் போன்ற தன்னார்வ அடிப்படையிலான செயற்பாடுகளும் இதனுள் உள்ளடங்குகின்றன. தெற்காசியாவிலுள்ள பெரும்பாலான குடும்பங்களில் இவ்வாறான செயற்பாடுகள் குடும்பத்திலுள்ள பெண் உறுப்பினர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன அல்லது அவற்றை மேற்கொள்வதற்கான முதன்மைப் பொறுப்பு பெண்களுக்கே இருக்குமெனக் கருதப்படுகின்றது. இப்பணியானது சமூக மற்றும் பொருளாதார பெறுமானத்தைக் கொண்டுள்ளதுடன், அப்பெறுமானம் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் மற்றும் பாரிய பொருளாதார விஸ்தீரணத்துக்கும் முக்கியமானதும் ஆகும். எவ்வாறிருப்பினும், ஊதியமற்ற பராமரிப்புப் பணிக்கான உழைப்புஇ நேரம் மற்றும் பெறுமானம் என்பன பிரதான பொருளாதாரத் திட்டமிடுநர்களால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அதற்கான காரணம், இப்பணி பெண்களினதும் ஆண்களினதும் பால்நிலைமயப்படுத்தப்பட்ட வகிபாகங்கள் எனும் போர்வையிலேயே இன்னும் நோக்கப்படுவதாகும்.

இம்மாநாடானது ஆய்வின் முடிவூகள் பற்றிக் கலந்துரையாடி அவற்றைப் பகிர்ந்துகொள்ளுதல், ஊதியமற்ற பராமரிப்புப் பணி பற்றி சிறப்பாக புரிந்துகொள்ளுதல் மற்றும் பொருளாதாரத்திற்கான அதன் முக்கியத்துவம் எவ்வழிகளில் காணப்படுகின்றது என்பதை ஆய்ந்தறிதல் ஆகிய விடயங்களுக்காக, பெண்களின் பிரச்சினைகள் தொடர்பில் செயற்படும் ஆய்வாளர்களையூம் செயற்பாட்டாளர்களையூம் ஒன்றிணைக்கவூள்ளது. இம்மாநாட்டில், இலங்கை விவகாரம் தொடர்பான சிறு ஆவணத் தொகுப்பும் இடம்பிடிக்கவூள்ளது.

ஃப்ளையர் பதிவிறக்க