Category: Events

Forum Theatre

மேடை அரங்காற்ருவோர் குழுவானது WMC வினை அணுகி அவர்களின் அடுத்த  அரங்கத் தயாரிப்புக்காக நிதி ஆதரவு கேட்டிருந்தனர். அது 2008 மார்ச் 08 – 12 ஆம் திகதி வரை நிகழ்வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. ஆற்றுகைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த தலைப்புக்களாக, குடும்ப வன்முறை மற்றும் இன முரண்பாடு என்பன அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பின் நோக்கமானது வேறுபட்ட நோக்கங்கள் உள்ள ஆட்களை கருத்துக்களைப் பரிமாறுவதற்கு தூண்டுவதும், ஒரு பொதுவான பிரச்சினையை வேறுபட்ட கருத்துடையவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை பார்க்கத் … Continue reading Forum Theatre

International Women’s Day 2008

2008 மார்ச் 8 ஆம் திகதி கொழும்பு பெண்கள் நிறுவனங்கள் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுமிடத்து ஒன்றிணைந்த 25 க்கும் மேற்பட்ட பெண்கள் நிறுவனங்களை உள்ளடக்கிய வலைப்பின்னலாகிய பெண்கள் நிறுவனங்கள் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கு ஒன்றாக இணைந்து ஒரு மகாநாட்டையும் எதிர்ப்பு பேரணியையும் 2008 மார்ச் 08 ஆம் திகதி நடாத்தியது. இம் மகாநாடானது கொழும்பு மகாவலி நிலையத்தில் நடந்ததுடன் தற்போதைய அரசியல் நிலை, யுத்தமும் பெண்கள் மீதான அதனது தாக்கமும், பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் … Continue reading International Women’s Day 2008

International Peace Day 2007

செப்ரெம்பர் 21 – 
2007 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி சர்வதேச சமாதானத்தை குறிக்கும் முகமாக பெண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான கலைவேலைப்பாட்டு வீதிக்கண்காட்சி இடம்பெற்றது. கலைவேலைப்பாடு உடைய இப் பதாதைகளானவை சமாதானத்தைக் கருப்பொருளாகக் கொண்டிருந்ததுடன் இலங்கை பூராகவும் வேறுபட்ட பகுதிகளிலுள்ள பெண்கள் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. WMCஇந் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

WMC Film Festival 2007

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் முகமாக ஒரு பெண்ணிய திரைப்பட விழாவானது ரஷ்ய காலாச்சார நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அங்கே தீபா மேதாவால் நெறிப்படுத்தப்பட்ட ஏத் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கலண்டர் கேள்(Calendar Girls) மற்றும் மாக்கறெதவொண்ரொற்ற (Margarethe Vontrotta) ஆல் நெறிப்படுத்தப்பட்ட ரோசன்ரா (Rosentrasse) போன்ற படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு படமும் திரையிடப்பட்ட பின்பு படம் குறித்த கலந்துரையாடலானது பேராசிரியர் நெலுபர் டி மெல் … Continue reading WMC Film Festival 2007

International Women’s Day 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த … Continue reading International Women’s Day 2007

Annual Women’s National Convention 2006

9 – 11 ஜனவரி 2007
 வாதுவ – இலங்கை 
பெண் செயற்பாட்டாளர்களுக்கான 2006 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தேசிய சமவாயம் 2007 ஜனவரியில் இடம்பெற்றது. கண்டி, நுவரெலிய, மொனராகலை, புத்தளம், கேகாலை, கம்பஹா, குருணாகல, மற்றும் கொழும்பு உட்பட பல மாவட்டங்களிலிருந்து 31 பெண் செயற்பாட்டாளர்கள் இதில் பங்குபற்றினர். WMC ஆனது அதனது முதலாவது வருடாந்த தேசிய சமவாயத்தை 1984 ஆம் ஆண்டு பெண் செயற்பாட்டாளர்களுக்காக நடாத்தியது. ஜனநாயகம் மற்றும் முரண்பாட்டின் பரந்துபட்ட ஆய்வுப்பொருட்களுடன் தொடர்புடைய … Continue reading Annual Women’s National Convention 2006

Consultation on proposing a General Recommendation on ‘Women and Armed Conflict’ to the CEDAW Committee

2006 டிசெம்பர் 7 
களுத்துறை – இலங்கை WMC ஆனது சர்வதேச பெண்கள் உரிமைச் செயற்பாட்டு கண்காணிப்பு ஆசிய பசுபிக் நிறுவனத்துடன் கூட்டிணைந்து (IWRAW-AP)    சீடோ குழுவிற்கான, – பெண்களும் ஆயுத முரண்பாடும் – மீதான ஒரு புது சிபார்சுகளை முன்மொழிவதற்கான கலந்துரையாடல்களுக்கான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடாத்தியது. திருமதி சாந்தி தையரியம் சீடோக் குழு உறுப்பினர் மற்றும் (IWRAW-AP) முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் இக் கூட்டத்திற்கு வசதிஏற்பாடுகளைச் செய்தனர். இக் கூட்டத்தின் நோக்கமானது  சீடோ சமவாயத்தில் பொதுவான … Continue reading Consultation on proposing a General Recommendation on ‘Women and Armed Conflict’ to the CEDAW Committee

International Day for the Elimination of Violence Against Women 2006

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது 2006 நவம்பர் 28 ஆம் திகதி.இதை கொழும்பில் கொண்டாடும் முகமாக ஒரு சிறு நாடக விழாவும், இசை நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது. இவ்விழாவின் கருப்பொருளாக இருந்தது ‘வன்முறைகளில்லாத நாளை’ என்பதாகும். இவ் விழாவானது பொதுமக்களுக்கு கட்டணமின்றி திறந்துவிடப்பட்டிருந்ததுடன், WMC ஆனது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தும் விழிப்புணர்வை பொதுமக்களிடையே எழுப்புவதற்கு இச் சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.